உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 17, 2010

டிரான்ஸ்பார்மர் பழுதானதால் இருளில் மூழ்கும் சின்னாத்துக்குறிச்சி

ஸ்ரீமுஷ்ணம் : 

               ஸ்ரீமுஷ்ணம் அருகே டிரான்ஸ் பார்மர் பழுதானதால் கிராமமே இருளில் முழ்கியுள்ளது.

                 ஸ்ரீமுஷ்ணத்தை அடுத்துள்ள சின்னாத்துக்குறிச்சி கிராமம் உள்ளது. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகில் டிரான்ஸ்பார்மர் உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பழுதான இந்த டிரான்ஸ் பார்மரை உடனடியாக மாற்றாத காரணத்தால் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் விவசாய மோட்டார் பம்ப் செட்டுகள் இயங்காததால் 50 ஏக்கர் விவசாய பயிர்கள் கருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வார காலமாக இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் முற்றிலுமாக இல்லாமல் கிராமமே இருளில் முழ்கியுள்ளது. விவசாய பம்ப் செட்டுகள் இயங்காததால் நடவு பயிர்கள் தண்ணீர் இல்லாமல் கருகி வருகிறது.

                     மேலும் 20 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் நடவு நடுவதற்கு முன்பு ஏர் உழுத கையோடு காய்ந்த நிலையிலும், நாற்று விட்ட வயல்கள் தண் ணீர் இன்றியும் காய்ந்தும் வருகின்றன. பழுதான டிரான்ஸ் பார்மரை மின் வாரியம் கழட்டி எடுத்து சென்று இரண்டு நாட்களாகியும் உடனடியாக அமைக்காத காரணத்தால் பயிர்கள் காய்ந்து விடும் நிலையில் உள்ளது. தற்போது தற்காலிகமாக டிரான்ஸ்பார்மர் இல்லாமல் நேரடியாக வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. குறைந்த வோல்டேஜ் காரணமாக பல்புகள் விளக்கை விட குறைந்த வெளிச்சம் தருகிறது. மின்வாரியம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சின்னாத்துக்குறிச்சி கிராமத்தில் புதிய டிரான்ஸ் பார்மர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior