பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் (62) சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.உடல்நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.சென்னை திருவான்மியூரில் வசித்து வந்த அனுராதா ரமணன், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 850 நாவல்களையும் எழுதியுள்ளார்.
சிறை, ஒரு வீடு இரு வாசல், கூட்டுப் புழுக்கள் ஆகிய இவருடைய நாவல்கள் திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன.எழுத் துத் துறையில் சிறந்து விளங்கியதற்காக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடமிருந்து தங்கப் பதக்கம் மற்றும் சிறந்த எழுத்தாளருக்கான ராஜீவ் காந்தி விருது என பல்வேறு விருதுகளை இவர் பெற்றுள்ளார்.கடந்த சில நாள்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்த இவர், அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார் .ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். அவருடைய உடல் திருவான்மியூர் வால்மீகி நகரில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. திங்கள்கிழமை மாலை 4 மணிக்கு பெசன்ட் நகரில் உள்ள எரிவாயு தகன மயானத்தில், அவருடைய உடல் தனகம் செய்யப்பட உள்ளது. மறைந்த அனுராதா ரமணனுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக