உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 17, 2010

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.ஓ.எஸ்., பழுது: வாகன ஓட்டிகள் அவதி

ராமநத்தம் : 

               சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எஸ்.ஓ.எஸ்., எனப்படும் 'சேவ் அவர் சோல்' அவசர அழைப்பு தொலைபேசி செயலிழந்து காட்சிப் பொருளாக உள்ளது.

              சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச் சாலையாக மேம்படுத்தப்பட்ட பின் ஆங்காங்கே 'டோல்வே' அமைத்து வாகன ஓட்டிகளிடம் வரி வசூல் செய் கின்றனர். விபத்து ஏற்படுமாயின் வாகன ஓட்டிகள், பயணிகளின் நலன் காக்க 'டோல்வே' கட்டுப்பாட்டில் 2 கி.மீ., தூரத்திற்கு ஒரு 'சேவ் அவர் சோல்' எனும் டெலிபோன் பூத் அமைத்து இலவச சேவை செய்து வருகின்றனர்.

              திடீர் விபத்து ஏற்பட்டால் போனில் இருக்கும் சிவப்பு பட்டனை அழுத்தினால் திருச்சி 'டோல்வே' கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் போகும். அவர்கள் எந்த பூத்திலிருந்து தகவல் வருகிறது என தெரிந்து கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு கொண்டு செல் வது முதல் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாமல் இருப்பது வரை தகுந்த நடவடிக்கை எடுப்பர். தற்போது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ராமநத்தம் - எழுத்தூர் இடையே உள்ள வளைவில் அமைக்கப் பட்டுள்ள டெலிபோன் பூத் கடந்த சில மாதங் களாக செயல்படாமல் காட்சிப் பொருளாகவே உள்ளது. இதேபோல் உளுந்தூர்பேட்டை - எழுத்தூர், எழுத்தூர் - பாடாலூர் வரை திருச்சி டோல்வே கட்டுப்பாட்டில் உள்ள எஸ்.ஓ.எஸ்.,களை பரிசோதித்து செயலிழந்த பூத்களை சீரமைத்து வாகன ஓட்டிகள் மற்றும் தொலைதூர பயணிகளின் நலன் காக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior