சிதம்பரம்:
சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனையில் கடந்த 3 தினங்களாக மோட்டார் பழுதால் தண்ணீன்றி நோயாளிகளும், மருத்துவர்களும் பெரும் அவதியுற்றுள்ளனர்.
சிதம்பரம் காமராஜ் அரசு மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறையை போர்வெல் அமைக்கப்பட்டு போக்கு சிறிய மேல்நிலை குடிநீர்த் தேக்கத் தொட்டி மூலம் நீரேற்றி குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நீரேற்றும் மோட்டாரில் காயில் பழுதடைந்ததால் கடந்த 3 தினங்களாக தண்ணீரின்றி உள்நோயாளிகளும், மருத்துவர்களும் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மகப்பேறு பிரிவில் பிரசவத்துக்கு வரும் பெண்களுக்கு இனிமா கொடுக்க அருகில் உள்ள டீக்கடையில் தண்ணீர் பெறும் நிலை உள்ளது. கழிபபறைகள் உபயோகப்படுத்தப்பட முடியாமல் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அரசு மருத்துவமனையில் தினந்தோறும் குடிநீர்த் தொட்டி வழிந்து அருகில் உள்ள சாலையில் ஓடிவந்தது. குறிப்பிட்ட நேரத்தில் மோட்டாரை இயக்கி நீரை சேமிக்காமல் மோட்டாரை நீண்ட நேரம் இயங்கியதால் மின்மோட்டார் பழுதடைந்ததாக அங்குள்ள உள்நோயாளிகள் தெரிவிக்கின்றனர். எனவே நோயாளிகள் நலன் கருதி உடனடியாக நீரேற்றும் மோட்டாரை போர்க்கால அடிப்படையில் பழுது நீக்க மாவட்ட சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு நுகர்வோர் குழுமச் செயலாளர் சி.டி.அப்பாவு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக