விருத்தாசலம்:
விருத்தாசலத்தில் உள்ள அரசு கிளை நூலகம் கடந்த 55 ஆண்டுகளாக தனியார் கட்டடத்திலேயே இயங்கி வருகிறது. வி ருத்தாசலத்தில் அரசு கிளை நூலகம் 1955-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 55 ஆண்டுகள் கடந்த நிலையிலும் கிளை நூலகம் இன்றும் தனியார் கட்டடத்திலேயே இயங்கி வருகிறது. தற்போது விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் ஒரு சிறிய கட்டடத்தின் மேல் தளத்தில், போதுமான இடவசதி இன்றி நூலகம் உள்ளது. இந்நூலகத்தில் நிரந்த உறுப்பினர்களாக 5500 பேர் உள்ளனர். மேலும் நாளொன்றுக்கு 200-க்கும் மேற்பட்ட வாசகர்கள் நூலகத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நூல கக் கட்டடத்தில் போதுமான வசதி இல்லாததால் வாசகர்கள் அமர்ந்து படிப்பதற்கும் குறிப்பு எடுத்துச் செல்லவும் முடியாத நிலை உள்ளது.
இதேபோன்று கணினி வைப்பதற்கு தனி அறையில்லாததால் கணினி பயன்பாடும் குறைவாகவே உள்ளது. குறிப்புதவி, சிறுவர் பிரிவு மற்றும் குடிமைப்பணி நூல்களை வைப்பதற்கும் தனி இடம் இல்லை. இதனால் அனைத்து நூல்களையும் ஒரே இடத்தில் வைக்கவேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதனால் குறிப்புதவி நூல்களை எடுக்க வாசகர்கள் வரும்போது புத்தகம் எங்கு இருக்கிறது எனத் தெரியாமல் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். மேலும் நூலகத்துக்கு வரும் புது புத்தகங்களை வைப்பதற்கு இடம் இல்லாததால் பல புத்தகங்கள் மூட்டையிலேயே கட்டப்பட்டும், திரும்ப அனுப்பும் நிலையும் ஏற்படுகிறது.இதுகுறித்து விருத்தாசலத்தைச் சேர்ந்த திருமுதுகுன்றம் எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் ரத்தின.புகழேந்தி கூறியது:விருத் தாசலத்தில் கடந்த 55 ஆண்டுகளுக்கு மேலாகவே அரசு கிளை நூலகம் தனியார் கட்டடத்தில் இயங்கி வருகிறது. இதுகுறித்து பல்வேறு கோரிக்கைகளை தொடர்புடைய அதிகாரிகளிடம் முறையிட்டோம். இறுதியாக விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நூலகம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டது. இதற்கு நகராட்சி மற்றும் கோட்டாட்சியர் அலுவலகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பள்ளியில் நூலகக் கட்டடம் அமைப்பதற்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனுமதி தரவில்லை என கூறப்படுகிறது.
இது குறித்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் கேட்டதற்கு,
பள்ளி இடங்களை பொது பயன்பாட்டுக்கு வழங்கக்கூடாது என கல்வி இயக்குநர் சுற்றிக்கை விடுத்துள்ளார். எனவே இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் இயக்குநருக்கு மட்டுமே உண்டு என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கூறியதாகத் தெரிவித்தார்.நூலகத் துக்கு தொடர்புடைய அரசுத்துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு விருத்தாசலம் அரசு கிளை நூலகத்தை சொந்த கட்டடத்தில் அமைத்துத்தர வேண்டும் என்பதே விருத்தாசலம் பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக