நெய்வேலி:
வடலூர் ஓ.பி.ஆர். கல்வியியல் கல்லூரியில் "கல்வியியல் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம்' என்ற தலைப்பில் மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. கருத்தரங்கில் 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். கருத்தரங்குக்கு கல்லூரியின் செயலர் ஆர்.செல்வராஜ் தலைமை வகித்தார். சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழக மூத்தோர் கல்வித் துறையின் பேராசிரியர் டாக்டர் என்.ஓ.நெல்லையப்பன் கருத்தரங்கை தொடங்கி வைத்துப் பேசினார். பாரதியார் பல்கலைக் கழகத்தின் கல்வித் தொழில் நுட்பத்துறை பேராசியரியர் சிங்காரவேலு,தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பத்திற்கு ஆங்கில அவசியத்தை எடுத்துரைத்தார்.இன்டெல் நிறுவனத்தின் துணை மேலாளர் பி.ஆர்.சங்கரி வகுப்பறை மேலாண்மைக் குறித்து விளக்கினார். ஓ.பி.ஆர். கல்வி நிறுவனத்தின் நிர்வாக அலுவலரும்,கருத்தரங்க ஆலோசகருமான லதா ராஜ வெங்கடேசன் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் பொன்மொழிசுரேஷ் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக