உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 17, 2010

புதுச்சேரி கார்களை பிடிப்பதில் அதிகாரிகள் தயக்கம்! : தாமாக முன்வந்து வரி செலுத்துவது அதிகரிப்பு

கடலூர் : 

                  தமிழகத்தில் சாலை வரி செலுத்தாத புதுச்சேரி பதிவெண் கொண்ட கார்களை பிடிப்பதில் அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

                    தமிழகத்தை விட புதுச்சேரியில் வாகனங்கள் விலை குறைவாக இருப்பதால் தமிழக எல்லையோர கிராமமக்கள் இதை பயன்படுத்திக் கொள்வது வாடிக்கையாகி விட்டது. நாற்பதாயிரம்ரூபாய் மதிப் புள்ள டூ விலர் வாங்குவோருக்கு 4000 ரூபாய் வித்தியாசம் உள்ளது. புதுச்சேரியின் எல்லையோரத்தில் உள்ள விழுப்புரம், கடலூர் மாவட்ட சில கிராம மக்கள் புதுச்சேரியில் கொடுக்கல் வாங்கல், பெண் எடுப்பது போன்ற வற்றில் நெருங்கிய தொடர்பு இருப்பதால் அங்குள்ள வாகனங்களை தமிழக பகுதிகளில் ஊடுருவுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது.

                 மேலும் புதுச்சேரி எல்லையோர கிராம மக்கள் போலியான முகவரி கொடுத்து வாகனங் களை வாங்கி அதை தமிழக பகுதிகளில் ஓட்டி வருவது அதிகரித்து வருகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மட்டும் சாலை வரி செலுத்திவிட்டு தமிழக மாவட்டங்களான கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் ஓட்டி சாலையை தேய்ப்பது சரியானதா என்கிற கேள்வி எழுந்தது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் பொருட்டு புதுச்சேரி பதிவெண் கொண்ட வாகனங்கள் தமிழக பகுதியில் ஓட்ட தனியாக சாலை வரி செலுத்த அறிவுறுத்தப் பட்டது.

            உண்மையான முகவரியில் வாங்கப்பட்ட வாகனங்களாக இருந்தால் ஆர்.சி.புத்தகம், டிரைவிங் லைசன்ஸ் போன்றவை புதுச்சேரியில் வாங்கி இருக்க வேண்டும். கடலூரில் ஓட்டுனர் உரிமம் பெற்று புதுச்சேரி வாகன பதிவெண் கொண்ட டூ வீலர்களை ஓட்டினால் அது சட்ட விரோதமாக கருதப்படுகிறது. அவ்வாறு விதிமுறை மீறி தமிழகத்தில் ஓட்டும் வாகனங் கள் சோதனை செய்யப் பட்டு உடனுக்குடன் சாலை வரி செலுத்துமாறு பணிக்கப்படுகின்றனர்.

               அதைத் தொடர்ந்து கடலூர், விழுப்புரம் மாவட்ட வட்டார போக்குவரத்து அதிகாரிகள், போலீசார் தினம் தினம் கடலூர்-புதுச்சேரி மாவட்ட எல்லையில் வாகன சோதனை செய்து வருகின்றனர். கடலூரில் மட்டும் இதுவரை 1000த்திற்கும் மேற்பட்ட டூ வீலர்கள் சோதனை செய்து பிடித்துள்ளனர். சோதனை செய்யும் சில போலீசார் வழக்குபோடமல் இருக்க சாலைவரி கட்டணத்தில் பாதித்தொகையை கேட்கின்றனர். இதனால் வாகன உரிமையாளர்கள் தாமாகவே முன்வந்து வரி செலுத்தி வருகின்றனர். வாகனம் வாங்கும் தொகையில் 8 சதவீதம் சாலைவரியாக செலுத்த வேண்டும். இவையெல்லாம் டூ வீலர் கள் மட்டுமே கடைபிடிக்கப்படுகிறது.

                  ஆனால் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதுச்சேரி பதிவெண் கார்கள் கடலூர், விழுப்புரம் மாவட்டத்திற்கு வந்து செல்கின்றன. ஆனால் அதிகாரிகள் கார்களை சோதனை செய்து பிடிக்க தயக்கம் காட்டி வருகின்றனர். இதை விட அரசுக்கு அதிக வருமானம் தரக்கூடிய மதிப்புமிக்க கார்களை பிடிப்பதை தவிர்த்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் இதுவரை 4 பழைய வாகனங்களை மட்டுமே பிடித்துள்ளனர். அரசுக்கு கார்கள் மூலம் அதிக வருவாய் ஈட்டக்கூடியதாக இருந்தும் அதிகாரிகள் ஏன் தயங்குகின்றனர் என புரியாத புதிராக உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior