சிதம்பரம்:
சிதம்பரத்தை அடுத்த கீரப்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள 3311 கே.வி. துணை மின் நிலையத்தில் உள்ள ஒரு மின் மாற்றியின் திறனை 3 எம்.வி.ஏ.வி.லிருந்து 5 எம்.வி.ஏ.வாக உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளது. ரூ.2 லட்சம் மதிப்பீட்டில் அமைந்துள்ள புதிய மின்மாற்றியால், கீரப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சீரான மின்சாரம் விநியோகிக்கப்படும். மின் மாற்றியில் தொடக்கவிழா வியாழக்கிழமை நடைபெற்றது. செயற்பொறியாளர் ஆர்.செல்வசேகர் தலைமை தாங்கினார். கடலூர் செயற் பொறியாளர் கே.சம்பத்மகாஜன் முன்னிலை வகித்தார். கடலூர் மின் பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் எம்.ரவிராம் புதிய மின்மாற்றியை இயக்கி வைத்தார். இதில் உதவி செயற்பொறியாளர்கள் என்.குமார், கே.வாசுதேவன்,எஸ்.பாலாஜி, மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக