உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மே 17, 2010

பொதிகை டிவி'யில் சிதம்பரம் நடராஜர் கோவில்

General India news in detail
                       பொதிகை, 'டிவி'யில் தினமலர் வழங்கும், 'எப்படிப் பாடினரோ' நிகழ்ச்சியில், இன்று, ஆடல் வல்லானின் அருமைகளை பறைசாற்றும் சிதம்பரம் கோவில் பற்றிய தகவல்கள் முதல் பகுதி இடம் பெறுகின்றன. வாரம்தோறும் திங்கள், செவ்வாய் கிழமைகளில், காலை 11.30 முதல் 11.55 மணி வரை, தினமலர் வழங்கும், 'எப்படிப் பாடினரோ' நிகழ்ச்சி பொதிகை 'டிவி'யில் ஒளிபரப்பாகி வருகிறது.

               அதில், இன்று, சொல்லில் அடங்கா பெருமைகள் அடங்கிய சிதம்பரம் கோவில் உள்ள இடம், ஈசனுக்குப் பூசை செய்ய பூப்பறிக்க வசதியாக, புலியின் கால்களையும் கண்களையும் வேண்டிப் பெற்று ,'வியாக்ரபாதர்' என்ற முனிவர் இறைவனின் ஆனந்தக் கூத்தை காண வேண்டி தவம் செய்யும் வரலாறு, அனைத்து சிவாலய மூர்த்தங்களின் சக்தியும், இரவில் அர்த்த காமபூஜைக்கு முன் வந்தடங்கும் திருமூலட்டான மூர்த்தியின் பெருமை, பஞ்சபூத மற்றும் இறைவன் ஆடிய பஞ்ச சபைகளுள் ஒன்றாக சிதம்பரம் திகழ்வது, சைவ சமயக் குரவர்களில் மூவரால் பாடப்பெற்றது.

               திருமுறைப் பதிகங்கள் கண்டெடுக்கப்பட்ட நிகழ்வு, தல விருட்சம் மற்றும் தீர்த்தங்கள் பற்றிய தகவல்கள் இடம் பெறுகின்றன. ஆடியோ வேர்ல்ட் சுக்ராவிஷன் தயாரிப்பான இந்நிகழ்ச்சி, டாக்டர் கணேஷ் இசையில், நீலகண்டன் ஒருங்கிணைப்பில், அரிமளம் ரவிச்சந்திரன் எழுத்தாக்கத்தை ஜெயம் கொண்டான் தொகுத்து வழங்கி இயக்கியுள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior