சிதம்பரம்:
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவம் ஜூன் 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 20-ம் தேதி வரை நடைபெறுகிறது.
உற்சவ விவரம்:
11-ம் தேதி வெள்ளி சந்திரபிரபை வாகனம், 12-ம் தேதி தங்கசூரிய பிரபை வாகனம், 13-ம் தேதி வெள்ளி பூதவாகனம், 14-ம் தேதி வெள்ளி ரிஷப வாகனம் (தெருவடைச்சான்), 15-ம் தேதி வெள்ளி யானை வாகனம், 16-ம் தேதி தங்க கைலாச வாகனம், 17-ம் தேதி தங்கரதத்தில் பிச்சாண்டவர் வீதியுலா, 18-ம் தேதி வெள்ளிக்கிழமை தேர் திருவிழா, இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை. 19-ம் தேதி அதிகாலை ஆயிரங்கால் மண்டபத்தில் சூரிய உதயத்திற்கு முன் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம், பிற்பகல் திருவாபரண அலங்கார காட்சி. பஞ்சமூர்த்தி வீதியுலா வந்த பின்னர் 12 மணிக்கு மேல் ஆனித் திருமஞ்சன மகா தரிசனம் நிகழ்ச்சியும், சித்சபா பிரவேச நிகழ்ச்சியும் நடைபெறும். 20-ம் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு நிகழ்ச்சியுடன் விழா முடிவடைகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக