உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 08, 2010

போலீஸ் அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளது: எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் குற்றச்சாட்டு

கிள்ளை : 

                  போலீஸ் அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டுள்ளது என எம்.எல்.ஏ., அருண் மொழித்தேவன் பேசினார். 

                    விலைவாசி உயர்வை கண் டித்து சிதம்பரம் அடுத்த கிள்ளை பகுதியில் அ.தி.மு.க., சார்பில் தெருமுனை பிரசாரக்கூட்டம் நடந்தது. கிள்ளை நகர செயலாளர் விஜயன், நஞ்சைமகத்து வாழ்க்கையில் தொகுதி செயலாளர் தெய்வீகன், தில்லைவிடங்கனில் ஊராட்சி செயலாளர் நடேசன், பின்னத்தூரில் ஊராட்சி செயலாளர் இதயத்துல்லா தலைமை தாங்கினர். மாவட்ட மீனவரணி இணை செயலாளர் காத்தவராயசாமி, முன்னாள் கதர் வாரிய உறுப்பினர் ஜெயராமன், சிதம்பரம் நகர செயலாளர் தோப்பு சுந்தர், ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன், மாவட்ட துணை செயலாளர் தேன் மொழி முன்னிலை வகித் தனர்.

கூட்டத்தில் எம்.எல்.ஏ., அருண்மொழித்தேவன் பேசியதாவது:

                     கடந்த நான்கு ஆண்டுகளில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. இந்த மாவட்ட அமைச்சர் கண் முன்னே சப் இன்ஸ்பெக்டர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். வேட்டியில் கறை படியும் என்பதால் உயிருக்கு போராடிய சப் இன்ஸ்பெக்டரை தனது காரில் ஏற்ற மறுத்தார். ஜெ., ஆட்சியில் சுனாமி பாதிப்பின் போது மூன்று அமைச்சர்கள் கிள்ளை பகுதியிலேயே தங்கி பணி செய்தனர். ஜெ., நிர்வாகத்திறன் மற்றும் நேர்மையான ஆட்சியால் தான் சங்கராச்சாரியாரை போலீசார் கைது செய்தனர். ஆனால் தி.மு.க., ஆட்சியில் தொண்டனை கூட கைது செய்ய முடியாமல் போலீசார் திணறுகின்றனர். அதற்கு காரணம் நேர்மையான போலீசாரின் கைகள் தி.மு.க., வினரால் கட்டப்பட் டுள்ளது. இவ்வாறு அருண்மொழித்தேவன் பேசினார். 

                  கூட்டத்தில் எம்.எல்.ஏ., செல்வி ராமஜெயம், தலைமை கழக பேச்சாளர்கள் தில்லை கோபி, சேகர், மணிமாறன், செல் வம், மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி செயலாளர் நவநீதகிருஷ்ணன், ஒன்றிய பொருளா ளர் அசோகன், முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் ஆறுமுகம், முருகுமணி, பொன்னுசாமி, அமிர்தலிங்கம், ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior