உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 08, 2010

கடலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அறிவிப்பு

கடலூர்:

                   கடலூர் மாவட்ட அரசு இசைப் பள்ளியில் 2010-2011-ம் ஆண்டுக்கான மாணவ, மாணவியர் சேர்க்கை தொடங்கப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்துள்ளார்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 

                   தமிழ்நாடு கலைப் பண்பாட்டுத் துறையின் கீழ் கடலூர் அரசு இசைப்பள்ளி 1998 முதல் செயல்பட்டு வருகிறது. அரசு இசைப் பள்ளியில் குரலிசை, நாகசுரம், தவில், தேவாரம், பரதநாட்டியம் மற்றும் மிருதங்கம் ஆகியவற்றில் திறமையான ஆசிரியர்களைக் கொண்டு 3 ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். அரசு சான்றிதழ் வழங்கப்படும். குரலிசை, பரதநாட்டியம், மிருதங்கம் ஆகியவற்றுக்கான பாடப் பிரிவில் சேர்வதற்கு 7-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நாகசுரம்,  தவில் தேவாரம், ஆகிய பாடப் பிரிவுகளில் சேர்வதற்கு, தமிழில் எழுதப்படிக்கத் தெரிந்தால் போதும். வயது வரம்பு 12 முதல் 25 வரை.இசைப் பள்ளியில் சேரும் மாணவ மாணவியருக்கு அரசு விதிகளுக்கு உள்பட்டு, விடுதி வசதி, இலவச பேருந்து பயண அட்டை, ஆதிதிராவிட, பிற்படுத்தப்பட்ட மாணவ மாணவியருக்கு அரசு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இதில் சேர விரும்பும் மாணவ மாணவியர் பள்ளி வேலை நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை, கடலூர் புதுப்பாளையம் பிரதானச் சாலையில் அமைந்துள்ள அரசு இசைப் பள்ளி தலைமை ஆசிரியரைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள் என்று செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior