உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 08, 2010

மின் தடை: 50 கிராமங்களில் நீரின்றி காயும் குருவை



சிதம்பரம்:
 
                   சிதம்பரம்,​​ காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் மின்தடையால் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் குருவை சாகுபடி பயிர்கள் காய்கின்றன.
 
                         சிதம்பரம், ​​ காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் ஆண்டுதோறும் மின்மோட்டார்கள் உதவியுடன் முன்குருவை சாகுபடி செய்வது வழக்கம்.​ அதுபோல் இந்த ஆண்டு முன் குருவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.​ ஆனால்,​​ அதிகரித்துள்ள மின்தடையால் மின்மோட்டார் இயக்க முடியாமல் நீரின்றி பயிர்கள் காய்கின்றன.

பயிர்கள் காய்கின்ற பகுதிகள்:​​ 
 
                   சிதம்பரம் வட்டம் - பூலாமேடு,​​ காட்டுக்கூடலூர்,​​ வையூர்,​​ கண்டியாமேடு,​​ நாஞ்சலூர்,​​ சிவபுரி,​​ வரகூர்பேட்டை,​​ பெராம்பட்டு,​​ ஜெயங்கொண்டப்பட்டினம்,​​ நடுத்திட்டு,​​ கவரப்பட்டு,​​ வல்லம்படுகை,​​ செட்டிக்குளம்,​​ கீரப்பாளையம்,​​ வடஹரிராஜபுரம்,​​ தாதம்பேட்டை,​​ சாக்காங்குடி,​​ குச்சிப்பாளையம்,​​ புளியங்குடி,​​ ஆயிப்பேட்டை,​​ ஒரத்தூர்,​​ பரதூர்,​​ அய்யனூர், அக்கிராமங்கலம்,​​ விளாகம்,​​ புதுவிளாகம்,​​ சேதியூர் ​ காட்டுமன்னார்கோவில் வட்டம்-​ அத்திப்பட்டு,​​ மாங்குடி,​​ கருப்பூர்,​​ முள்ளங்குடி,​​ நளன்புத்தூர்,​​ கீழப்பருத்திக்குடி,​​ குமராட்சி,​​ குணவாசல்,​​ ஆயங்குடி,​​ ரெட்டியூர் உள்ளிட்ட கிராமங்கள்.
 
                எனவே மேற்கண்ட கிராமங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் எனவும்,​​ அதற்கு நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழகத்துக்கே கேட்டுப் பெற வேண்டும் என தமிழக உழவர் முன்னணி அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
 
கூடுதல் வரி வசூல்:​​ 
 
                  சிதம்பரம் காட்டுமன்னார்கோவில் வட்டங்களில் நிலவரியாக நஞ்சை நிலத்துக்கு ஏக்கருக்கு ரூ.5,​ புஞ்சை நிலத்துக்கு ஏக்கருக்கு ரூ.2 வசூலிக்கப்பட்டு வந்தது.​ ஆனால்,​​ தற்போது நூற்றுக்கணக்கில் வரி செலுத்தும்படி அலுவலர்களால் வலியுறுத்தப்படுகிறது. ஆகவே மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டு பழையபடியே வசூலிக்க ஆணையிட வேண்டும்.​ கவரப்பட்டு வாய்க்கால் ​(உளையார் வாய்க்கால்)​ வெட்டும் பணி தொடங்கப்பட்டிருக்கிறது. இவ்வாய்க்கால் பூலாமேட்டிலிருந்து கவரப்பட்டு வரை வெட்டப்பட்டால் மட்டுமே பாசனத்துக்கும்,​​ வடிகாலுக்கும் முழுமையான பயன்தரும் எனவே இவ்வாய்க்கால் பணியை இடையில் நிறுத்தாமல் கவரப்பட்டு வரை முழுமையாக வெட்டி சீர்செய்ய வேண்டும் என தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்டச் செயலாளர் சி.ஆறுமுகம் கோரிக்கை விடுத்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior