கடலூர் :
கடலூர் நகரில் மீண்டும் பாதாள சாக்கடை திட்டத்திற்கு ஆங்காங்கே தோண்டப்பட்டு வரும் பள்ளங்களால் விபத்து ஏற்படுகிறது.கடலூர் நகரின் முக்கிய சாலைகளில் பாதாளசாக்கடை பணிக்காக பைப் புதைக்க நெல்லிக்குப்பம் ரோடு, வண்டிப்பாளையம், என முக்கிய சாலைகளில் பள்ளம் தோண் டப்பட்டது. நீண்ட நாட்களாக பைப்புகள் புதைக்கப்படாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டது.
கடலூரில் உள்ள நகர் நல அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் போராட்டத்தில் இறங்கின. இதைத்தொடர்ந்து கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு ஒரு மாதத்தில் முக்கிய சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்பட்டு நெடுஞ்சாலை துறையினர் சாலை அமைக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இதன் பின் நெல்லிக்குப்பம் ரோட்டில் சாலை போடுவதற்கான பூர்வாங்க பணிகள் நடந்தது. ஆனால் இந்த பணியும் பாதாள சாக்கடை பணியை விட மிக மோசமான அளவில் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.
தற்போது நெல்லிக்குப்பம் ரோட்டில் பாதாள சாக்கடைக்கு "மேன் ஹோலை' சுற்றி கான்கிரீட் அமைப் பதற்கு மீண்டும் "மேன் ஹோல்' பகுதியைச் சுற்றி பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் உடன் முடிக்காததால் இரவு நேரத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும், சரி செய்யப்பட்ட இடங்களில் தார் சாலைகள் போட தாயார் நிலையில் இருந்த ரோடுகளில் தற்போது கேபிள் புதைப்பதற்காக அதன் அருகிலேயே மீண்டும் பள்ளம் தோண்டப்படுகிறது. கடலூர் நகரில் முக்கிய சாலையான நெல்லிக் குப்பம் சாலை தொடர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாகவே உள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக