உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 08, 2010

வேலைக்கு ஆட்கள் கிடைக்காததால் மாற்று சாகுபடியில் விவசாயிகள்

கடலூர் : 

                   கடலூர் பாரம்பரிய பயிர் செய்ய கூலி ஆள் கிடைக்காததால் விவசாயிகள் குறைந்த வருவாய் உள்ள பூ சாகுபடிக்கு மாறியுள்ளனர். கடலூர் பகுதியில் நாணமேடு, உச்சிமேடு, கண்டகாடு உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக கத்திரி, வெண்டை, வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பாரம்பரியமாக விவசாயம் செய்து வருகின்றனர். இது விவசாயிகளுக்கு வருவாயை ஏற்படுத்திக் கொடுத்தது.

                   கடந்த பல ஆண்டுகளாக பாரம்பரியமாக செய்து வந்த விவசாயம் தற்போது நலிந்து விடும் நிலைக்கு தள்ளப்பட் டுள்ளது. இதற்கு காரணம் விவசாய நிலங்களில் கூலி வேலைக்குள் ஆள் கிடைப்பது அரிதாகி வருகிறது. எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறோம் என்ற நிலையிலும் விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் வருவதில்லை.இதற்கு காரணம் ஒவ்வொரு ஊராட்சியிலும் நடந்து வரும் ஆண்டுக்கு 100 நாள் வேலை உறுதி திட்டத்தால், விவசாய கூலி வேலைக்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் பாரம்பரிய விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது.விவசாயத்திற்கு ஆட்கள் கிடைக்கவில்லை என்பதால் விவசாயிகள் தற்போது பூக்கள் பயிர் செய்யத் துவங்கியுள்ளனர். நாணமேடு பகுதியில் தற்போது அதிகளவில் கோழிக் கொண்டை பூ சாகுபடி செய்யப்பட்டுகிறது. கிலோ 12 ரூபாய் என குறைந்த வருவாய்தான் என்றாலும் வேறு வழியின்றியும் நிலத்தை தரிசாக போட மனமில்லாததால் விவசாயிகள் இது போன்று மாற்று சாகுபடியில் இறங்கியுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior