சிதம்பரம் :
தலித் மக்களின் வாழ்வாதார பிரச்னைகளை நிறைவேற்றக் கோரி சிதம்பரத்தில் அம்பேத்கர் பேரவை - தலித் மண்ணுரிமை கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதம் நடந்தது. ஜமாபந்தியில் மாவட்டத்தில் எந்த தாலுகாவிலும் பஞ்சமி நில விவரம் ஒட்டப்படாததை கண்டித்தும், தலித் மக்களின் வாழ்வாதார பிரச்னைகளை நிறைவேற்றக் கோரியும், பஞ்சமி நிலங்களை மீட்டுத்தரக் கோரியும் அம்பேத்கர் பேரவை - தலித் மண்ணுரிமை கூட்டமைப்பு சார்பில் சிதம்பரம் ஆர்.டி.ஓ., அலுவலகம் முன் உண்ணாவிரதம் நடந்தது.
அம்பேத்கர் பேரவை மாவட்ட அமைப்பாளர் கணேசன் தலைமை தாங்கினார். செயலாளர் அற்புதராஜ் வரவேற்றார். பொதுச்செயலாளர் அன்புதாசன் துவக்கி வைத்தார். மா.கம்யூ., செயற்குழு உறுப்பினர் மூசா, இந்திய கம்யூ., செயற் குழு நாகராஜன், தலித் மண்ணுரிமை கூட்டமைப்பு மாவட்ட அமைப்பாளர் ஜான் பிரிட்டோ முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூ., மணிவாசகம், மா.கம்யூ., மாவட்ட செயலாளர் ஆறுமுகம் விவசாய அணி கலியபெருமாள், முன்னாள் ஊராட்சி தலைவர் சேகர் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். தலித் மண்ணுரிமை கூட்டமைப்பு மகளிரணி சங்கீதா நன்றி கூறினார்.·
0 கருத்துகள்:
கருத்துரையிடுக