உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 08, 2010

விதிகளை மீறும் வாகன ஓட்டிகளால்... டிராபிக் ஜாம்: லாரன்ஸ் ரோட்டில் தொடரும் அவலம்

கடலூர் : 

                ஒருவழிப் பாதையான லாரன்ஸ் ரோட்டில் விதிகளை மீறி வந்த அரசு பஸ் களால் ஒரு மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. கடலூர் நகரின் பிரதான பகுதியாக லாரன்ஸ் ரோடு உள்ளது. இங்கு பஸ் நிலையம், ரயில்வே ஸ்டேஷன், தியேட்டர், வங்கிகள், வணிக நிறுவனங்கள் நிறைந்துள்ளதால் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரித்தது வந்தது. கடைவீதிக்கு வருபவர்கள் தங்களது வாகனங்களை குறுகலான ரோட்டில் இருபுறமும் நிறுத்திக் கொள்வதால் அடிக்கடி போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் 7 ஆண்டிற்கு முன் லாரன்ஸ் ரோடு ஒருவழிப் பாதையாக அறிவிக்கப் பட்டது.

                  மேலும் இருசக்கர வாகனங்களை ரோட் டில் ஒரு பகுதியில் மட்டும் நிறுத்த ஏற்பாடு செய்தனர். அதேப்போன்று திருவந்திபுரம் மார்க்கத்திலிருந்து வரும் கனரக வாகனங்கள் வண்டிப்பாளையம் ரோடு, சூரப்ப நாயக்கன் சாவடி வழியாகவும், திருவந்திபுரம் மற்றும் வண் டிப்பாளையம் மார்க்கத்திலிருந்து வரும் கார், ஆட்டோ மற்றும் மோட் டார் சைக்கிள்கள் தேரடி தெரு, ஆர்.எம்.எஸ்., வழியாக லாரன்ஸ் ரோட்டிற்கு திருப்பி விட்டனர். பஸ் நிலையத்திலிருந்து திருவந்திபுரம் மார்க்கம் செல் லும் கனரக வாகனங்கள் லாரன்ஸ் ரோடு, தேரடி தெரு, போடி செட்டி தெரு, பெருமாள் கோவில் தெரு வழியாக திருப்பி விட்டனர்.இந்த விதிமுறைகளை வாகன ஓட்டிகள் மீறாமல் இருக்கும் பொருட்டு காலை 7 முதல் இரவு 9 மணி வரை லாரன்ஸ் ரோடு - வண்டிப்பாளையம் ரோடு சந்திப்பில் (பிள்ளையார் கோவில் அருகில்) போக்குவரத்து போலீசார் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு போக் குவரத்தை ஒழுங்குபடுத்தி வந்ததால் லாரன்ஸ் ரோட் டில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறைந்தது.

                    இந்நிலையில் போலீஸ் பற்றாக்குறை காரணமாக சில மாதங்களாக ஒருவழிப்பாதையான லாரன்ஸ் ரோட்டில் போலீசார் சரிவர பணியில் ஈடுபடுவதில்லை. இதனால் திருவந்திபுரம் மார்க்கத்திலிருந்து வரும் வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசார் இல்லை என்றால் லாரன்ஸ் ரோடு வழியாக செல்கின்றனர்.இந்நிலையில் நேற்று காலை லாரன்ஸ் ரோடு ஒரு வழிப்பாதையில் போக்குவரத்து போலீசார் பணியில் இல்லை. இதன் காரணமாக பகல் 12 மணிக்கு திருவந்திபுரம் மார்க்கத்திலிருந்து வந்த இரண்டு அரசு டவுன் பஸ் டிரைவர்கள் லாரன்ஸ் ரோடு வழியாக பஸ் நிலையம் செல்ல முயன்றனர். அதே நேரத்தில் பஸ் நிலையத்திலிருந்து நடுவீரப்பட்டு செல்லும் தனியார் பஸ் ஒன்று எதிரே வந்தால் மேற்கொண்டு அரசு டவுன் பஸ் செல்ல முடியவில்லை.

                      இதற்கிடையே அரசு பஸ்சை பின் தொடர்ந்து ஏராளமான ஆட்டோக்களும், மோட்டார் சைக்கிள்களும் ஒரு வழிப்பாதையில் வந்ததால் வண்டிப்பாளையம் ரோடு, தேரடி தெரு மற்றும் சுப்புராய செட்டித் தெருவிலும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. தகவலறிந்த போக்குவரத்து போலீசார் விரைந்து சென்று விதியை மீறி ஒரு வழிப்பாதையில் வந்த அரசு பஸ்கள் மற்றும் பிற வாகனங்களை பின்னால் அனுப்பிய பிறகே பகல் ஒரு மணிக்கு போக்குவரத்து சீரானது. போலீஸ் இருந்தால் தான் போக்குவரத்து விதிகளை மதிப்பது என்ற மனநிலையில் வாகன ஓட்டிகள் செயல்பட்டு வருகின்றனர். இதனை முறைப்படுத்த போலீசார், லாரன்ஸ் ரோட்டில் அவ் வப்போது திடீர் சோதனை செய்து ஒரு வழிப்பாதையில் வரும் வாகனங்கள் மீது வழக்கு தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior