உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 11, 2010

ஆட்டோ டிரைவர்கள், பழக்கடைக்காரர்கள் மோதல் பண்ருட்டியில் 10 கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன

பண்ருட்டி : 

                    பண்ருட்டியில் ஆட்டோ டிவைர்கள், பழக்கடையினரிடையே ஏற்பட்ட மோதலில் பத்து பழக்கடைகள் அடித்து நெறுக்கப்பட்டன. பண்ருட்டி காந்தி ரோட்டில் பழ வியாபாரம் செய்பவர் ராமதாஸ். இவர் மகன் செல்வகணபதி(22). இவர் நேற்று மாலை கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப் போது அங்கு ஆட்டோ சங்க தலைவர் கந்தசாமி ஆட்டோவில் வந்த பயணி ஒருவருக்காக செல்வ கணபதியிடம் 120 ரூபாய்க்கு பழம் வாங்கிவிட்டு, 70 ரூபாய் கொடுத்தார். மீதம் 50 ரூபாயை தரவில்லை.

                        பழக்கடையில் வேலை செய்த பரணி என்பவர், கந்தசாமியிடம் மீதி பணத்தை வாங்கி கொடுத்துவிட்டு ஆட்டோவை எடுத்துச் செல்லுமாறு கூறினார். இதனால் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செல்வகணபதி மற்றும் அருகில் இருந்த பழக்கடை ஊழியர்கள் சேர்ந்து கந்தசாமியை தாக்கினர். அதில் காயமடைந்த அவர் பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

                  இதனையடுத்து 10க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் பழக்கடைகளை அடித்து நொறுக்கினர். டி.எஸ்.பி., பிரசன்னகுமார், இன்ஸ்பெக்டர் செல்வம், சப் இன்ஸ்பெக்டர் தவமணி, பச்சையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மோதலில் ஈடுபட்டவர்களை அடித்து விரட்டினர். இதில் ஆறு பழக்கடைகள், இரண்டு அரிசி கடைகள் உட்பட 10 கடைகள் சேதமடைந்தன.

                     போலீசார் வழக்கு பதிந்து ஆட்டோ டிரைவர்கள் திருவள்ளுவர் நகர் குமார்(35), அம்பேத்கர் நகர் ராதாகிருஷ்ணன், ராஜ்குமார்(32) மற்றும் பழக்கடையைச் சேர்ந்த சரவணன்(40), அப்பாதுரை(24), செல்வகணபதி(22) உட்பட 10க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவத்தை அடுத்து அங்கு பதட்டம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior