பண்ருட்டி :
மகாபலிபுரம் செல்ல டிராவல்ஸ் காரில் வந்த குடும்பத்தினரை குறிப்பிட்ட இடத்திற்கு செல்லாமல் காரை தாறுமாறாக ஓட்டிய டிரைவர் பண்ருட்டி போலீசாரிடம் சிக்கினார். கார் பறிமுதல் செய்யப்பட் டது.
காரைக்கால் பாரதி நகரை சேர்ந்தவர் அப்துல்ஹாதி(50). இவர் சென்னை மண்ணடியில் உள்ள தங்கை ஜகரின்னிசா(44) வீட்டிற்கு குடும்பத்தினருடன் விடுமுறையை கழிக்க சென்றிருந்தார். நேற்று காலை 8.30 மணிக்கு மண்ணடியில் இருந்து மகாபலிபுரம் அருகில் உள்ள எம்.ஜி.எம். செல்வதற்காக அப்துல்ஹாதியின் மனைவி ஜீனத் துள்(45), மகள்கள் நஜீராபிரதோஷ் (12), நபிஷாபிரதோஷ்(10), மகன் நஜீம் உசேன்(8), தங்கை ஜகரின் னிசா (44), ஹனீஸ்பாத்திமா(17) ஆகிய ஆறு பேர் மண்ணடியில் உள்ள பாத்திமா டிராவல்ஸ் டாடா சுமோவை வாடகைக்கு அமர்த்தி புறப்பட்டனர்.
பண்ருட்டியை சேர்ந்த டிரைவர் முகமதுரபீக்(28) சுமோவை ஓட்டி வந்தார். சென்னையில் இருந்து புறப்பட்ட அவர் மகாபலிபுரம் எம்.ஜி.எம்., பகுதிக்கு செல்லாமல் செங்கல்பட்டு வழியாக திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். இது குறித்து காரில் பயணம் செய்தவர்கள் டிரைவரிடம் கேட்டனர். டிராவல்ஸ் உரிமையாளருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு பேசிய டிரைவர் முகமதுரபீக், காரை மோதி விபத்து ஏற்படுத்தப்போவதாக கூறி தாறுமாறாக ஓட்டினார்.
இதனால் காரில் இருந்தவர்கள் கூச்சலிட்டு டிராவல்ஸ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மொபைல் போன் மூலம் தகவல் கொடுத்தனர். சினிமாவில் வருவது போல் சம்பவம் நடந்ததால் டிராவல்ஸ் உரிமையாளர் ஜாபர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சுமோ கார் விக்கிரவாண்டி டோல்கேட் ஸ்பீட் பிரேக் அருகில் வந்த போது சுமோவில் வந்த ஹனீஸ்பாத்திமா, நஜீராபிரதோஷ், நபீஷா பிரதோஷ் ஆகிய மூவரும் பின்கதவை திறந்து குதித்தனர். பண்ருட்டி போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் சப் இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையில் போலீசார் பண்ருட்டி ரயில்வே கேட் அருகில் போக்குவரத்தை ஸ்தம்பிக்க செய்து சுமோ கார் டிரைவர் முகமது ரபீக்கை பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். சுமோவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக