உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 11, 2010

கடன் இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற்றம் வராது ஸ்டேட் பாங்க் உதவி பொது மேலாளர் பேச்சு


கடலூர் : 

                 கடன் இல்லாமல் வாழ்க்கையில் முன்னேற் றம் வராது என வட்டார தலைமையக உதவி பொது மேலாளர் ராமன் பேசினார்.பாரத ஸ்டேட் பாங்க் கடலூர் முதுநகர் கிளை சார்பில் விவசாய கடன் தள்ளுபடி திட்ட சிறப்பு வசூல் முகாம் மேற்கு ராமாபுரத்தில் நடந்தது. ஊராட்சித் தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். முதுநகர் முதன்மை மேலாளர் செல்லதுரை வரவேற்றார்.

சென்னை வட்டார தலைமையக உதவி பொது மேலாளர் ராமன் பேசியதாவது: 

                           விவசாயம் இல்லை என்றால் உணவுக்கு பஞ்சம் ஏற்படும். வாழ்க்கையில் கடன் இல்லாமல் முன்னேற்றம் வராது. இது நிதர்சனமான உண்மை. இது விவசாயம், கல்வி, தொழில் எதுவாக இருந் தாலும் மூலதனமாக பணம் தேவை படுகிறது. பணத்தை சேர்த்து வைத்து எந்த தொழிலையும் செய்ய முடியாது.

                       புத்திசாலித்தனம் என்பது கடன் வாங்கி செய்வதில் தான் உள்ளது. அதே சமயத்தில் கடனை வாங்கி திருப்பி செலுத்தினால் மட்டுமே மற்றவர்கள் பயனடைய முடியும். வங்கிகள், விவசாயிகள் நிரந்தரம். விவசாயம் என்பது தலைமுறை, தலைமுறையாக நடந்து வருகிறது. நாடு வளர வேண்டுமென்றால் விவசாயிகளுக்கு அனைத்து சலுகைகளும் அளிக்கப்பட வேண்டும் என முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கூறியுள்ளார். வங்கிகள் இல்லாமல் விவசாயிகள் செயல்பட முடியாது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாரத ஸ்டேட் வங்கி 8 ஆயிரம் கோடி கடன் வழங்கியுள்ளது. இதற்கு காரணம் பாரத ஸ்டேட் வங்கிக்கு கிளைகள் அதிகம். அதனால் வாடிக்கையாளர்கள், விவசாயிகள் அதிகம். இந்த 8 ஆயிரம் கோடி அடுத்த 10, 20 ஆண்டுகளில் 80 ஆயிரம் கோடியாக உயர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.புதுச்சேரி மண்டல வாணிப அலுவலக முதன்மை மேலாளர் சுந்தரராஜன், மேலாளர் பாலசந்திரன், களப்பணியாளர் பாஸ்கர், மார்க்கெட் அலுவலர்கள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior