உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 11, 2010

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை எதிர்த்து போராடுவோம்: ராமதாஸ்




 
                  நெய்வேலி நிலக்கரி நிறுவன ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி, அவர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். இல்லையெனில் நிலக்கரி நிறுவனத்தை எதிர்த்து, கடலூர் மாவட்டம் முழுவதும் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் எச்சரித்துள்ளார். 
 
இது குறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:  
 
                    நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள். அந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய 2008-ல் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டது. அதன்படி முதல் கட்டமாக 5 ஆயிரம் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்திருக்க வேண்டும்.  ஆனால் நிலக்கரி நிறுவனம் வேண்டுமென்றே காலதாமதம் செய்து வருகிறது. இதற்காக பல கட்டப் போராட்டங்களை நடத்தியும், நிலக்கரி நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  இந்நிலையில் பணி நிரந்தரம், ஊதிய மாற்று ஒப்பந்தம் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் கடந்த 4 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அவர்களில் சிலரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது.  விபரீத நிகழ்வு எதுவும் நடப்பதற்கு முன்னர், நெய்வேலி நிலக்கரி நிறுவனம் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி, கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்.  இல்லையெனில், தொழிலாளர்களுக்கு தார்மீக ஆதரவு தெரிவித்து கடலூர் மாவட்டத்தில் பா.ம.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும். அப்போராட்டத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறுகளுக்கு நெய்வேலி நிலக்கரி நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும் என்று ராமதாஸ் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior