கடலூர் : 
                     கடலூர் மாவட்டத்தில் கான்கிரீட் வீடு கணக்கெடுக்கும் பணியை ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் உதயச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் நடந்து வரும் வளர்ச்சி பணிகளை ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் உதயசந்திரன், கலெக்டர் சீத்தாராமன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். 
                          கான்கிரீட் வீடுகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வரும் திருவந்திபுரம், கே.என்.பேட்டை, சாத்தங்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தனர். ராமாபுரத்தில் நடந்து வரும் பெரியார் நினைவு சமத்துவபுரம் வீடு கட்டும் பணிகளை பார்வையிட்டு, கட்டுமானப் பணிகள் ஜூலை 7ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வழிசோதனைப்பாளையத்திலிருந்து தேவர் அடியார் சத்திரம் வரை 2.46 கி.மீட்டர் தூரம் 28.71 லட்ச ரூபாய் செலவில் போடப்பட்டு வரும் சாலை பணியை ஆய்வு செய்த போது கற்கள் அளவு பெரியதாக இருந்ததால் மாற்றி போட உத்தரவிட்டார்.
                        மேலும் அந்த கிராமத்தில் 1.75 லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் தரைப்பாலம், 3.5 லட்சம் ரூபாய் செலவில் நடந்து வரும் தடுப்புச் சுவர் பணிகளை பார்வையிட்டார். தொடர்ந்து சின் னதானக்குப்பத்தில் நடந்து வரும் சாலை பணிகள், டி. என்.பாளையத்தில் நடக்கும் குளம் வெட்டும் பணி, விளையாட்டு மைதானம் அமைக்கும் பணி, காரைகாடு கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டப்பட்டு வரும் குளத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் திட்ட அலுவலர் ஜெயஸ்ரீ, செயற்பொறியாளர் சரவணக்குமார், உள்ளிட்ட அலுவலர் சென்றனர். 


 
 
0 கருத்துகள்:
கருத்துரையிடுக