உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஜூன் 11, 2010

சென்னை பல்கலை. தொலைநிலை கல்வி பட்டப் படிப்புகளோடு இலவச பட்டயப் படிப்பு

              சென்னை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வியில் இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு இலவச பட்டயப் படிப்புகள் வழங்கப்படவுள்ளன.  

இது தொடர்பாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் க. திருவாசகம் கூறியது:   
                    
               பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வியில் இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளில் பல்வேறு பாடப் பிரிவுகள் உள்ளன. இவற்றில் வழங்கப்படும் கல்வியை மேலும் தரப்படுத்தவும், மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்தவும் பல்கலைக்கழகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.   அதன்படி, 2010-11-ம் கல்வி ஆண்டில் இருந்து தொலைநிலைக் கல்வியில் இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச பட்டயப் படிப்புகளும் வழங்கப்படவுள்ளன.  இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தில் தள்ளுபடியும் அளிக்கப்படும்.   இளநிலைப் பட்டப் படிப்புகளில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் பட்டயப் படிப்பும், முதுநிலைப் படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு முதுநிலைப் பட்டயப் படிப்பும்  வழங்கப்படும்.  இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேரும் மாற்றுத் திறனாளிகளுக்கு முழு கல்விக் கட்டண விலக்கும், மாணவிகளுக்கு 20 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படும்.   சென்னை பல்கலைக்கழகத்தின் இணைப்புக் கல்லூரிகளின் பட்டப் படிப்புகள், தொலைநிலைக் கல்வியின் பட்டப் படிப்புகள் ஆகியவற்றில் படித்து பட்டம் பெற்ற மாணவர்கள், தொலைநிலைக் கல்வியின் முதுநிலைப் பட்டப் படிப்புகளில் சேரும்பட்சத்தில் அவர்களுக்கு கல்விக் கட்டணத்தில் 20 சதவீத தள்ளுபடி அளிக்கப்படும்.    ராணுவத்தில் பணியாற்றுபவர்களுக்கு கட்டண விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior