உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 26, 2010

காட்டுமன்னார்கோவில் அருகே 19 வீடுகள் எரிந்து சாம்பல்

சிதம்பரம்:

                 காட்டுமன்னார்கோவில் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீவிபத்தில் 19 குடிசை வீடுகள் எரிந்து சாம்பலாயின.காட்டுமன்னார்கோவிலை அடுத்த தண்டேஸ்வரநல்லூர் ஆர்சி தெருவில் உள்ள தன்ராஜ் என்பவரது பூட்டியிருந்த வீட்டிலிருந்து வியாழக்கிழமை நள்ளிரவு தீப்பிடித்தது. காற்றில் அடுத்தடுத்த வீடுகளுக்கும் தீ வேகமாகப் பரவியது.

                தகவல் அறிந்து காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், சேத்தியாத்தோப்பு பகுதியிலிருந்து தீயணைப்புபடையினர் விரைந்து வந்தனர். அவர்கள் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் 19 வீடுகள் மற்றும் அவற்றில் இருந்த பொருள்கள் எரிந்து நாசமடைந்தன. தீயை அணைக்க முயன்ற அடைக்கலசாமி என்பவர் காயமுற்று சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தன்ராஜ் என்பவரது வீட்டில் மின் கசிவினால் தீப்பிடித்து அங்கிருந்த மோட்டார் சைக்கிள் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப் பரவியதாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்தை கோட்டாட்சியர் அ.ராமராஜூ, வட்டாட்சியர் விஜயலட்சுமி, டிஎஸ்பி ராமச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டனர். 

                      கடலூர் மாவட்ட வருவாய் அதிகாரி எஸ்.நடராஜன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ. 2 ஆயிரம் ரொக்கம், வேட்டி சேலை, அரிசி மற்றும் மண்ணெண்ணெய் வழங்கினார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் திருமாறன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கினார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior