உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 26, 2010

புதுச்சேரி இரட்டை கொலை வழக்கு: இரண்டு கோர்ட்டுகளில் 6 பேர் சரண்

கடலூர் : 

              புதுச்சேரியில் ரவுடிகள் இருவர் வெடிகுண்டு வீசி கொலை செய்த வழக்கு தொடர்பாக நான்கு பேர் பண்ருட்டி கோர்ட்டில் நேற்று சரணடைந்தனர். இதே போல் திண்டிவனம் கோர்ட்டில் இருவர் சரணடைந்தனர்.  

                 புதுச்சேரி கோவிந்தசாலையைச் சேர்ந்த கழுவா செந்தில் மற்றும் அவரது கூட்டாளி பிளாக் பாலாஜி ஆகியோர் கடந்த 18ம் தேதி வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டனர். பெரியக்கடை போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்நிலையில் லாஸ் பேட்டையைச் சேர்ந்த பொன்னுரங்கன் மகன் சுந்தர் (25), பங்கஜான்சன் மகன் சந்திரன் என்கிற ஸ்ரீராம் (26), ஆறுமுகம் மகன் பிரபு (25), முத்தியால்பேட்டை கிருஷ்ணமூர்த்தி மகன் வினோத் (25) ஆகியோர், தங்களை இரட்டை கொலை வழக்கு தொடர்பாக புதுச்சேரி போலீசார் தேடுவதாக கூறி நேற்று மதியம் பண்ருட்டி கோர்ட்டில் மாஜிஸ்திரேட் ஈஸ்வரன் முன்னிலையில் சரணடைந்தனர்.

               நான்கு பேரையும் 15 நாள் காவலில் வைக்கவும், புதுச்சேரி மாநில போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். நான்கு பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதேபோல், இவ்வழக்கு தொடர்பாக அரியாங்குப்பம் அருந்தமிழன் (23), வாணரப்பேட்டை சுரேஷ் (21) ஆகிய இருவரும் நேற்று மாலை திண்டிவனம் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத் தில் மாஜிஸ்திரேட் ஜெயசூர்யா முன்னிலையில் சரணடைந்தனர். இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இருவரும் கடலூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

பட்டதாரிகள்: 

              கோர்ட்டில் சரணடைந்த அருந்தமிழன், சுரேஷ் ஆகிய இருவரும் வானூர் அடுத்த புளிச்சப்பள்ளத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த ஆண்டு ஓட்டல் மேலாண்மை படிப்பு முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior