உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 26, 2010

மத்திய அரசின் தொழில் முனைவோர் பயிற்சி கடலூரில் வரும் 28ம் தேதி துவக்கம்

கடலூர் : 

            தொழில் முனைவோருக்கான 6 வார கால பயிற்சி முகாம் வரும் 28ம் தேதி கடலூரில் துவங்குகிறது.

                 மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சி நிலையம் சார் பில் கடலூர் பீச் ரோடு, ரங்கநாதன் நகரில் இயங்கி வரும் வாஸ் தொண்டு நிறுவனத் தில் வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை தொழில் முனைவோர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. முகாமில் தொழில் தொடங்குவதற்கான உரிய ஆலோசனைகள், குறைந்த முதலீட்டில் தொழில் துவங்குவது, தேர்வு செய்யப்பட்ட பொருட்களின் உற்பத்தி செய்முறை விளக்கம், தொழில் துவங்க வங்கிகளில் கடனுதவி பெற தேவையான திட்ட அறிக்கை தயாரித்தல், நிர்வாக திறமையை மேம்படுத்துதல், அரசின் சலுகைகள், கடன் திட்டங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்படும். பயிற்சியின் இறுதியில் வங்கிகளின் சட்ட திட்டங்களுக்குட்பட்டு கடன் பெற்றுத்தர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இப்பயிற்சியில் சேர 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 45 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். பயிற்சியில் சேர விரும்புவோர் வரும் 28ம் தேதி காலை 10 மணிக்கு பயிற்சி நடைபெறும் இடத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களில் தகுதியுள்ள 25 பேர் மட்டுமே பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். 

இது குறித்து மேலும் விவரம் வேண்டுவோர் 

சிவலிங்கம், 
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் வளர்ச்சி நிறுவனம், 
65/1 ஜி.எஸ்.டி.ரோடு, 
கிண்டி, 
சென்னை-32 

என்ற முகவரியிலோ அல்லது 90920 90131, 9443397922 என்ற மொபைல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior