கடலூர் :
தமிழக அரசின் மாதாந்திர நிதியுதவி பெற நலிந்த கலைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
இயல், இசை, நாட்டியம், நாடகம், ஓவியம், சிற்பம் மற்றும் கிராமியக் கலைகளில் சிறந்து விளங் கிய 58 வயதிற்கு மேற் பட்ட தற்போது வறுமையில் வாடும் கலைஞர்களுக்கு தமிழக அரசு மாதம் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்க உள்ளது. இந்த நிதியுதவி பெற தகுதி உள்ள கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் www.tn.gov.inappforms/artculture/iyal_isai_appform.pdf என்ற இணையதள முகவரியிலிருந்தோ அல்லது உதவி இயக்குனர், தஞ்சாவூர் மண்டலக் கலை பண் பாட்டு மையம், 5, மணிமேகலை தெரு, முத்தமிழ் நகர், மருத்துவக் கல்லூரி சாலை, தஞ்சாவூர் என்ற முகவரியில் நேரிலோ அல்லது 10 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டிய சுய முகவரியிட்ட கவரை தாபாலில் அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் உரிய ஆவணங்கள் மற்றும் கோட்ட வருவாய் அலுவலரின் (ஆர்.டி.ஒ.,) பரிந்துரையை இணைத்து மேற்கண்ட முகவரிக்கு வரும் ஜூலை 31ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண் டும். கடந்தாண்டு விண் ணப்பித்தவர்கள் தற்போது விண்ணப்பிக்கத் தேவையில்லை.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக