உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 26, 2010

"காந்தி காலடித்தேடி' பயணக்குழு தடயங்கள் சேகரிப்பு

சிதம்பரம் :

             சிதம்பரத்திற்கு காந்தி வந்தது தொடர்பான தடயங்கள் மற்றும் விவரங்களை "காந்தியடிகள் காலடித்தேடி' பயணக்குழுவினர் சேகரித்தனர்.

             தமிழகத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த காந்தியடிகள், 1896ம் ஆண்டு முதல் 1946ம் ஆண்டு வரை 20 முறை தமிழகத்திற்கு வந்து மக்களுக்கு சுதந்திர உணர்வை ஊட்டியுள்ளார். காந்தி தமிழகத்திற்கு வந்த வரலாறு மறைந்து விடக்கூடாது என்பதற்காக, அவர் பயணித்த ஊர்களுக்குச் சென்று தடயங்களை சேகரித்து, ஆவணமாக வெளியிட காந்திய அமைப்புகள் முடிவு செய்து "காந்தியடிகள் காலடித்தேடி' என்ற பயணத்தை மேற்கொண் டுள்ளன.

                காந்தி கல்வி நிலைய நிர்வாகி அண்ணாமலை தலைமையில் காந்திய அமைப்பைச் சேர்ந்த மோகன், சிவக்குமார், விப்ரநாராயணன், நித்யானந்தம் ஆகியோர் அடங் கிய ஐந்து பேர் கொண்ட பயணக் குழுவினர் கடந்த 11ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் காந்தி பயணித்த ஒவ்வொரு பகுதிக்கும் நேரடியாகச் சென்று தடயங்கள் மற்றும் விவரங்களை சேகரித்து வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் காந்தி வந்த கடலூர், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, விருத்தாசலம் போன்ற பகுதிகளுக்கு அக்குழுவினர் வந்தனர். சிதம்பரம் வந்த பயணக்குழுவினரை சிதம்பரம் காந்தி மன்ற செயலாளர் குஞ்சிதபாதம், தலைவர் ராமலிங்கம் வரவேற்றனர். அவர்களிடம் காந்தி வந்தது தொடர்பாக விவரங்களை சேகரித்துக் கொண்டு நந்தனார் கோவிலுக்குச் சென்று கடந்த 1927ம் ஆண்டு செப். 11ம் தேதி காந்தி திறந்து வைத்த கல்வெட்டை பார்வையிட்டனர்.1934ம் ஆண்டு பிப். 16ல் நந்தனார் ஆண்கள் பள்ளிக்கு வந்த போது பார்வையாளர் பதிவேட்டில், இந்த இடத்திற்கு பல ஆண் டுகளுக்கு பின் மீண்டும் வருகை தருவது மகிழ்ச்சியளிக்கிறது என தனது கைப்பட குறிப்பு எழுதி வைத்துள்ளார். இதுவரை அந்த குறிப்பு பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த குறிப்பு பதிவேட்டை பயணக் குழுவினர் பார்வை யிட்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பின்னர் பள்ளி தலைமையாசிரியர் அம்பிகாபதியிடம் விளக் கம் கேட்டறிந்தனர்.

                  பரங்கிப்பேட்டை சேவா மந்திர் பெண்கள் பள்ளிக்குச் சென்று 1921 செப். 17ல் காந்தி வருகை தந்தது குறித்த கல்வெட்டு, அப்போதைய பள்ளி நிர்வாகத்திற்கு எழுதிய கடிதம் மற்றும் காந்தி வந்து சென்றது அவரது நினைவாக இன்று வரை பாதுகாக்கப்பட்டு வரும் ஒற்றை செருப்பு ஆகியவற்றை பார்வையிட்டனர். இது தொடர்பாக பள்ளி நிர்வாகிகள் சரஸ்வதி, நீலாவதி ஆகியோரிடம் விளக்கம் கேட்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து பயணக்குழுவினர் கடலூர் சென்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior