கடலூர் :
கடலூரில் கிராம ஊராட்சிகளில் பல உறுப்பினர் வார்டினை ஒரு உறுப்பினர் வார்டாக மாற்றுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
13 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 681 கிராம ஊராட்சிகளில் தற்போது 1,852 பல உறுப்பினர் வார்டுகள் உள்ளன. இதனை 4,917 ஒரு உறுப்பினர் வார்டாக மாற்றுவது குறித்த பயிற்சி கடலூரில் மாவட்ட வளர்ச்சி மன்ற கூடத்தில் நடந்தது. கலெக்டர் தலைமை தாங்கினார். கலெக்டர் நேர்முக உதவியாளர் தர்மசிவம் (வளர்ச்சி), ஊராட்சி உதவி இயக்குனர் பட்டாபிராமன் (பொறுப்பு) ஆகியோர் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தனர்.மேலும் ஒரு வார்டு உறுப்பினராக மாற்றும் பணி மக்கள் தொகை கணக்கெடுப்பு 2001ன் படியும், 2009ம் ஆண்டு வெளியிடப்பட்ட சட்டசபை வாக்காளர் பட்டியல் அடிப்படையில் வார்டு அமைக்கும் இப்பணி வரும் ஜூலை முதல் துவங்கி நவம்பரில் முடிகிறது.மேலும் ஒவ்வொரு மாதத்தில் 15ம் தேதிக்கு மேல் ஊராட்சியில் சிறப்புக் கூட்டம் கூட்டி தங்கள் கருத்துக்களை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலெக்டருக்கு அனுப்பி வைப்பார்கள்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக