உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 26, 2010

விவாகரத்து கோரி கோர்ட் முன் தற்கொலைக்கு முயன்றவர் கைது

கடலூர் :

                 விவாகரத்து வழக்கை விரைந்து முடிக்காத விரக்தியில் கோர்ட் முன் தற்கொலை செய்து கொள்ள முயன்றவரை பாலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்த குமுடிமுளை கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம் (48). விவசாய லி வேலை செய்கிறார். இவரது மனைவி லட்சுமி (42), மகள் பிரபா (22), மகன் வேலன் (18). ஐந்தாண்டிற்கு முன் லட்சுமிக்கு என்.எல்.சி., முதல் சுரங்கத்தில் தோட்டக்கலை துறையில் வேலை கிடைத்தது. அதன் பிறகு லட்சுமி தனது பிள்ளைகளுடன் நெய்வேலியில் வசித்து வருகிறார்.

              குமுடிமுளை கிராமத்தில் தனியாக வசித்து வரும் பன்னீர்செல்வம் தனது மனைவியை குடும்பம் நடத்த பலமுறை அழைத்தும் மறுத்து விட்டார். அதனால் பன்னீர்செல்வம் விவாகரத்து கோரி சிதம்பரம் சப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நான்கு மாதங்களுக்கு முன் கடலூர் செஷன்ஸ் கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கோர்ட்டில் இருந்து பலமுறை சம்மன் அனுப்பியும் லட்சுமி ஆஜராகாததால் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த பன்னீர்செல்வம் வழக்கை விரைந்து முடிக்காததைக் கண்டித்து நேற்று காலை 11.30 மணி அளவில் கடலூர் முதன்மை உரிமையியல் நீதிமன்றம் முன் தற்கொலை செய்து கொள்வதற்காக பூச்சி மருந்து குடிக்க முயன்றார்.கடலூர் புதுநகர் போலீசார், பன்னீர்செல்வம் வைத்திருந்த பூச்சி மருந்தை பறிமுதல் செய்தனர். தற்கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து பன்னீர்செல்வத்தை கைது செய்து இரு நபர் ஜாமீனில் விடுவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior