கடலூர் :
கடலூரில் டாக்டர் அளித்த தவறான சிகிச்சையால் தனது இடது கை விரல் அழுகி அகற்றப்பட்டது என்றும், டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகையைச் சேர்ந்தவர் மோகன் (35). இவரது இடது கை விரலில் கடந்த ஏப். 4ம் தேதி காயம் ஏற்பட்டது. பண்ருட்டி தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்றார். பின் கடலூர் எலும்பு முறிவு டாக்டர் பாண்டியன் என்பரிடம் சென்றார். பரிசோதித்த டாக்டர், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். 20 ஆயிரம் ரூபாய் செலவாகும். அதில் தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 10 ஆயிரம் ரூபாய் அனுமதி கிடைக்கும். மீதி 10 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண் டும் என்றார். அதன்படி பணம் செலுத்தியதும் ஏப்.7ம் தேதி மோகனுக்கு அறுவை சிகிச்சை செய்த பின் 9ம் தேதி வீட்டிற்கு அனுப்பினார். ஏழு முறை கிளீனிக் சென்று சிகிச்சை பெற்ற நிலையில் விரல் அழுகி துர்நாற்றம் வீசியது. அதிர்ச்சியடைந்த மோகன் கடந்த மே மாதம் 10ம் தேதி சென்னையில் உள்ள ரைட் மருத்துவமனைக்கு சென்றார். அங்கிருந்த டாக்டர்கள், விரலை எடுத்து விடவேண்டும். இல்லை என்றால் மற்ற விரல் களும் பாதிக்கும் என்றனர். அதன்படி மறுநாள் அறுவை சிகிச்சை மூலம் விரல் அகற்றப்பட்டது. டாக்டர் பாண்டியன் அளித்த தவறான சிகிச்சையால் தனது கை விரலை இழந்து விட்டதாகவும், இதற்கு காரணமாக டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் மோகன் நேற்று காலை புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக