சிதம்பரம்:
சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி நடராஜர் கோயில் அருகே சிதம்பரம் கீழரதவீதி நகராட்சி வரி வசூல் மையத்தில் காஸ்மோபாலிட்டன் அரிமா சங்கம் சார்பில் மாவட்ட சேவை நிதியிலிருந்த பெறப்பட்ட நிதி உதவியுடன் ரூ.1 லட்சம் செலவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது.
புதிய குடிநீர் இயந்திரத்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அரிமா மாவட்ட கவர்னர் வி.ரத்தினசபாபதி திறந்து வைத்தார். அரிமா சங்கத் தலைவர் எம்.கமல்கிஷோர்ஜெயின் தலைமை வகித்தார். நகரமன்றத் தலைவி ஹெச்.பௌஜியாபேகம் முன்னிலை வகித்தார். கியானா பேங்கர்ஸ் உரிமையாளர் மதன்ராஜ், மண்டலத் தலைவர் துரைசாமி, வட்டாரத் தலைவர் லலித்குமார் செயலாளர் கே.விஜயகுமார்தாலேடா, பொருளாளர் ஏ.ஆர்.மனோகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக