பண்ருட்டி:
பண்ருட்டி பஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் ஆபத்தான நிலையில் எந்நேரத்திலும் பயணிகள் மேல் விழும் நிலையில் தொங்கிக் கொண்டுள்ளன. பண்ருட்டி பஸ் நிலையத்துக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வதால் பஸ் நிலையம் எப்போது பரபரப்பாக இருக்கும்.
இந்நிலையில் திருச்சியைச் சேர்ந்த ஒரு துணிக்கடை பண்ருட்டி பஸ் நிலையத்தில் பஸ் நிறுத்தும் நிழற்குடைக்கு மேல் பகுதியில் உள்ள பெரும்பாலான இடத்தில் தங்கள் விளம்பரப் பலகைகளை அமைத்துள்ளது. கடந்த பல மாதங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்ட இந்த விளம்பரப் பலகைகளின் கட்டுகள் சேதம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது. இதில் அரசு பஸ் நேரக் கட்டுப்பாட்டு அறை அருகிலும், கடலூர் பஸ் நிற்கும் இடத்தின் அருகே தனியார் கட்டட சுவற்றிலும் பொறுத்தப்பட்டுள்ள மெகா சைஸ் பேனர் முறிந்து தொங்கிக்கொண்டுள்ளது. இவை எந்த நேரத்திலும் பயணிகள் மேல் விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
இது குறித்து நகராட்சி ஆணையர் கே.உமாமகேஸ்வரியிடம் செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டதற்கு.
ஆபத்தான நிலையில் உள்ள விளம்பரப் பலகைகளை புதன்கிழமை அகற்றி விடுவதாக கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக