உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 23, 2010

கடலூர் மாவட்ட ரயில் பாதைகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

கடலூர் : 

                விழுப்புரம் அருகே தண்டவாளம் தகர்ப்பு சம்பவத்தைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் ரயில் பாதைகளில் ஆயுதம் தாங்கிய போலீசார் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம் அடுத்த சித்தணி கிராமம் அருகே கடந்த 12ம் தேதி ரயில் பாதை வெடிகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. கியூ பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர். 

                 இந்நிலையில் தண்டவாளம் தகர்க்கும் சம்பவம் தொடரும் என சேலம் ரயில்வே இன்ஸ் பெக்டருக்கு கடந்த 20ம் தேதி எஸ்.எம்.எஸ்., வந்தது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள ரயில் பாதைகளில் பாதுகாப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் கடலூர் - சேலம், விழுப்புரம் - மயிலாடுதுறை, சென்னை - திருச்சி ஆகிய மூன்று மார்க்கங்களில் 144 கி.மீ., தூர ரயில் பாதையை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதற்காக 10 இன்ஸ்பெக்டர், 52 சப் இன்ஸ்பெக்டர், 86 போலீசார், ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் ஒருவர், ரயில்வே போலீஸ் 15, கிராம நிர்வாக அலுவலர்கள் 20, கிராம உதவியாளர்கள் 115, கிராம கண் காணிப்பு குழுவினர் 30, ஊர்க்காவல் படையினர் 20, போலீஸ் நண்பர்கள் குழுவினர் 20 பேர் என மொத்தம் 368 பேரை கொண்டு 77 கண்காணிப்பு குழு அமைக் கப்பட்டுள்ளது. 

                 ஒவ்வொரு குழுவிற்கும் ரிவால்வர் அல்லது துப்பாக்கி ஏந்திய போலீசார் ஒருவர், ரெயின் கோட், டார்ச் லைட்று, சிகப்பு வர்ணம் பூசிய ராந்தல் விளக்கு, ரயில் பாதையில் ஏதேனும் நாச வேலை நடந்திருந்தால் அவ்வழியே வரும் ரயிலை நிறுத்த வசதியாக சிகப்பு துணி வழங்கப்பட்டுள் ளது. ஒவ்வொரு குழுவிற்கும் 2 கி.மீ., தூரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இரவு, பகலாக தொடர்ந்து ரயில் பாதையை கண்காணித்து வருகின்றனர். மேலும், ரயில் பாதையை ஒட்டியுள்ள பாழடைந்த கட்டடங்கள், முட்புதர்களில் ஏதேனும் வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் கண்காணித்து வருகின்றனர். இக்குழுவினர் தொடர்ந்து ரயில் பாதையில் ரோந்து செல் கின்றனரா என்பதை அந்தந்த பகுதி டி.எஸ்.பி.,க்கள், இரவு ரோந்து செல்லும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் தனிப்பிரிவு சப் இன்ஸ்பெக்டர் சோதனை செய்து வருகின்றனர்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior