உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 23, 2010

நெய்வேலியில் புத்தகக் கண்காட்சி பணிகள் தீவிரம்

நெய்வேலி:

              13-வது நெய்வேலி புத்தகக் கண்காட்சி ஜூலை 9 முதல் 18-ம் தேதிவரை நடைபெறவிருப்பதால் அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக நெய்வேலியில் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சியை என்எல்சி நிர்வாகம் கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்தி வருகிறது. 

                  இக்கண்காட்சியில் 150-க்கும் மேற்பட்ட புத்தகப் பதிப்பாளர்கள், புத்தக வெளியீட்டாளர்கள் பங்கேற்று வருகின்றனர். மேலும் கணிணி மென்பொருள் தயாரிப்பாளர்கள் உள்ளிட்டோர் இக்கண்காட்சியில் பங்கேற்று வருகின்றனர். கடலூர் மாவட்டம் மட்டுமல்லாது, விழுப்புரம், தஞ்சை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் புதுச்சேரியில் இருந்தும் ஏராளமான புத்தக வாசகர்கள் ஆண்டுதோறும் இப்புத்தகக் கண்காட்சிக்கு வந்து புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர்.

                  இதுமட்டுமல்லாமல் புத்தகக் கண்காட்சி நடைபெறும் நாள்களில் தினந்தோறும் ஒரு எழுத்தாளரும், புத்தகப் பதிப்பாளரும் நெய்வேலி புத்தகக் கண்காட்சி குழுவினரால் கெüரவிக்கப்படுவதோடு, தினந்தோறும் ஒரு புத்தகமும் வெளியிடப்படுகிறது .புத்தக வாசகர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தினமணி மற்றும் நெய்வேலிப் புத்தகக் கண்காட்சி குழு இணைந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான கட்டுரைப் போட்டி, சிறுகதை எழுத்தாளர்களுக்கான சிறுகதைப் போட்டி, குறும்படப் போட்டிகளை நடத்தி அவர்களுக்கு பரிசுகளும் வழங்ப்பட்டு வருகின்றன.இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரங்கு அமைக்கும் பணி முதல், அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

                  மேலும் வெளி மாவட்டங்களில் இருந்துவரும் புத்தக வாசகர்களுக்கு ஏதுவாக சிறப்பு பஸ்களை இயக்குவது குறித்தும் போக்குவரத்துத் துறையினரிடம் புத்தக் கண்காட்சிக் குழுவினருடன் பேசி வருகின்றனர். நெய்வேலி புத்தகக் கண்காட்சியின் செயலரான ஜார்ஜ் ஜேக்கப் மற்றும் ஒருங்கிணைப்பாளரான சி.செந்தமிழ்செல்வன் ஆகியோர் புத்தகக் கண்காட்சிக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்துவருகின்றனர்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior