கடலூர் :
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை கண்டித்து போஸ்டர் ஒட்டிய புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியினர் இருவரை போலீசார் கைது செய்தனர் .கடலூர் புதுநகர் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
மஞ்சக்குப்பம் அண்ணா விளையாட்டரங்கின் சுற்றுச் சுவரில் கோவையில் நடக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை கண்டித்து இருவர் போஸ்டர் ஒட்டினர். "உயர் நீதிமன்றத்தில் தமிழுக்கு உரிமை கோரி உண்ணாவிரதம் இருந்த வக்கீல்கள் மதுரை, சென்னையில் நள்ளிரவில் கைது! சிறையிலும் தொடர்கிறது போராட்டம்! தமிழனுக்குச் சிறை தமிழுக்கு விழாவா? செல்லாத மொழிக்கு எதற்கு செம்மொழி மாநாடு? கைது செய்த வக்கீல்களை உடனே விடுதலை செய்! என்றிருந்தது. உடன் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்தனர். கடலூர் மஞ்சக்குப்பம் கருமாரபேட்டை புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் பாலு (38), உறுப்பினர் சக்திவேல் (35) என தெரியவந்தது. புதுநகர் போலீசார் வழக் குப்பதிந்து இருவரையும் கைது செய்தனர்.
பண்ருட்டியிலும் போஸ்டர்:
பண்ருட்டி தாலுகா அலுவலக வளாகத்தில் தமிழக முதல்வரை கண்டித்து புரட்சிகர இளைஞர் விடுதலை முன் னணியினரால் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டது.பண்ருட்டி தாலுகா அலுவலக வளாகத்தில் புரட்சிகர இளைஞர் விடுதலை முன்னணி சார்பில் 'ஈழத் தமிழர்களைக் கொன்றொழிக்க துணை போன எட்டப்பன் கருணாநிதியை கட்டபொம்மனாக காட்ட செம்மொழி மாநாடா ?' என வாசகங்கள் அடங்கிய பிட் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இதுகுறித்து தாலுகா அலுவலகத்தில் இருந்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பண்ருட்டி சப் இன்ஸ்பெக்டர் தவமணி அந்த போஸ்டரை கிழித்து விசாரணைக்கு கொண்டு சென்றார்.
விழுப்புரத்தில் இருவர் கைது:
விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட் சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் விழுப்புரம் நகரில் பல இடங்களில் நேற்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி மக்கள் தொடர்பாளர் விழுப்புரம் சாலாமேடு மோகன்(29), செயலாளர் வி.மருதூர் செல்வகுமார்(32) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக