கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பணியாளர்கள் கோவை தமிழ்ச் செம்மொழி மாநாட்டுக்காக, சிறப்பு விடுப்பு எடுத்துக் கொள்ளலாம் என்று, மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்து உள்ளார்.
கடலூர் ஆட்சியர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, 23 முதல் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது. மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அரசுப் பணியாளர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்காலம் என்று அரசு அறிவித்து உள்ளது.எனவே கடலூர் மாவட்டத்தில், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள அரசுப் பணியாளர்கள், சிறப்பு தற்செயல் விடுப்புக்கான, விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட அலுவலரிடம் கொடுத்துவிட்டு, கலந்து கொள்ளலாம் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. கடலூர் மாவட்டத்தில் பல அரசு அலுவலகங்களில், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் இந்த சிறப்பு தற்செயல் விடுப்புக்கு அரசு ஊழியர்கள் விண்ணப்பித்தபோது அதிகாரிகள், இதுதொடர்பாக தங்களுக்கு அரசாணை வரவில்லை என்று கூறி, விண்ணப்பத்தை வாங்க மறுத்ததாக அரசு ஊழியர்கள் பலர் புகார் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக