உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 23, 2010

பெருந்திரளாக செல்ல தமிழாசிரியர்களுக்கு அழைப்பு

சிதம்பரம்:

              செம்மொழியான தமிழ் மொழிக்கு மகுடம் சூட்டும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க தமிழாசிரியர்கள் கோவை மாநகருக்கு திரளாக வாருங்கள் என தமிழகத் தமிழாசிரியர் கழகப் பொதுச் செயலாளர் இரா.வெங்கடேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 

               கொங்கு தமிழ் கொஞ்சி விளையாடும் கோவையில் நடைபெறும் செம்மொழி மாநாட்டுக்கு தமிழாசிரியர்கள் திரளாக பங்கேற்க வேண்டும். வள்ளுவர் கோட்டம், பூம்புகார் கலைக்கூடம் அமைத்ததும் கருணாநிதி அரசுதான். குமரி முனையில் வள்ளுவரின் 133 அடி உயர சிலை அமைத்ததும் கருணாநிதி அரசுதான். தமிழ்ச் சான்றோர் பதின்மருக்கு சென்னை கடற்கரையில் சிலை அமைத்ததும் கருணாநிதி அரசுதான்.150 ஆண்டுக்கால தமிழர்களின் கனவாகிய தமிழுக்கு செம்மொழி தகுதியைப் பெற்று நனவாக்கியவர் கருணாநிதிதான். இத்தகு சிறப்புக்குரிய முத்தமிழறிஞர் கருணாநிதி சீரிய தலைமையில் நடைபெறும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்பதில் தமிழகத் தமிழாசிரியர் கழகம் பெருமை கொள்கிறது என இரா.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior