திட்டக்குடி :
திட்டக்குடி அருகே பிணம் புதைப்பது சம்பந்தமாக இரு தரப்பினரிடையே ஏற்பட்ட எதிர்ப் பால் பரபரப்பு ஏற்பட்டது. திட்டக்குடி மணல் மேடு பகுதியில் வெள்ளாற்றங்கரையோரம் மயானம் உள்ளது. இங்கு விஸ் வகர்மா சமூகத்தினர் ஒரு பகுதியிலும், குறவர் மற்றும் காட்டுநாயக்கன் தரப்பினர் மற்றொரு பகுதியிலும் பிணங்களை புதைத்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு பேரூராட்சி சார்பில் மயானத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்தது. இதில் இரு தரப்பினரிடையே இடம் சம்பந்தமாக பிரச்னை இருந்து வந்தது.
அப்பகுதி முக்கியஸ்தர்\களின் பேச்சுவார்த்தைக்குப் பின் ஒரு பகுதியில் விஸ்வர்கமா சமூகத்தினரும் மற்றொரு பகுதியில் மாற்று தரப்பினரும் பிணங்களை புதைக்க அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை குறவர் பகுதியில் இறந்த சோலைமுத்து (90) என்பவரது உடலை சுற்றுச்சுவர் கட்டிய ஒரு பகுதிக்குள் புதைக்க முடிவு செய்தனர். இதற்கு விஸ்வகர்மா தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.தகவலறிந்த திட்டக்குடி போலீசார் இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இறந்த சோலைமுத்துவின் உடலை சுற்றுச் சுவரின் ஒரு பகுதிக்குள் புதைக்கவும், இடம் யாருக்கு சொந்தமென தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்திட போலீசார் அறிவுறுத்தினர். இதனையேற்று இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக