கடலூர்:
கடலூரில் தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு பெயரில் ஒட்டிய போஸ்டரை, போலீசார் அதிரடியாக அகற்றினர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கடலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று முன்தினம் மதியம், "தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பு' என்ற பெயரில், தமிழீழமே! எங்ளை மன்னிக்காதே! என்ற தலைப்பில் துண்டு போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில், "உரிமை கேட்டாய்! அடிமை ஆக்கினோம்! கொலை செய்தாரை அரியணை ஏற்றினோம்! பழம்பெருமை பேசி, மண், மொழி இழந்தோம்! திராவிட மாயையால் திக்கற்றுப் போனோம்! வந்தேறிகள் வாழ வழியும் வகுத்தோம்! இந்திய மாயையில் இனி... மண்ணும் இழப்போம்! மானமும் இழப்போம்!' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. போஸ்டரில், 11 ஜாதி சங்கங்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த கடலூர் புதுநகர் போலீசார் விரைந்து வந்து, அனைத்து போஸ்டர்களையும் கிழித்து அப்புறப்படுத்தினர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிந்து, போஸ்டர் ஒட்டிய நபர்களைத் தேடி வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக