ராமநத்தம் :
ராமநத்தம் பகுதியில் பழக்கடைகள், குடோன்களில் ரசாயன கற்கள் வைத்து செயற்கை முறையில் பழுக்க வைத்த பழங்களை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர். ராமநத்தம் பகுதிகளில் பழக்கடைகளில் ரசாயன கற்கள் வைத்து பழங்களை செயற்கை முறையில் பழுக்க வைப்பதாக புகார் எழுந்தது. இதனைத் தொடர்ந்து மங்களூர் வட்டார உணவு ஆய்வாளர் பழனிவேல் தலைமையில் சுகாதார மேற்பார்வையாளர் சிவலிங்கம், ஆய்வாளர்கள் பூவராகவன், துரைராஜ், சக்திவேல், சுப்ரமணியன், ஷேக் முக்தார் உள்ளிட்ட அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 6 பழக்கடைகள் மற்றும் குடோன்களில் ரசாயன கற்கள் வைத்து செயற்கை முறையில் பழுக்க வைப்பதற்காக வைக்கப்பட்டிருந்த 20 பெட்டிகளில் இருந்த 4,000 ரூபாய் மதிப்புள்ள மாம்பழங்கள், வாழைப்பழங்களை கைப்பற்றி அணைக்கட்டு பகுதியில் கொட்டி அழித்தனர்.
சேத்தியாத்தோப்பு:
கிருஷ்ணாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சிவக்குமார் முன்னிலையில் சுகாதார மேற்பார்வையாளர் குணசேகரன் தலைமையிலான சுகாதார குழுவினர் சேத்தியாத்தோப்பில் உள்ள பழக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் 250 கிலோ மாம்பழங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக