உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 01, 2010

கடலூர், சிதம்பரம் பணிமனை முன் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கடலூர் : 

                ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பணிக் கொடை, ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்காததை கண்டித்து போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கடலூர், சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

                  அரசு போக்குவரத்துக் கழக விழுப்புரம் கோட்டத்தில், விழுப்பரம், கடலூர், திருண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் உள்ளிட்ட மண்டலங்களில் டிரைவர், கண்டக்டர் உள்ளிட்ட தொழில் நுட்ப பணியாளர்கள் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பணி புரிந்து வருகின்றனர். இதில் கடலூரில் 9 பேரும், சிதம்பரத் தில் 5 பேர் உட்பட விழுப் புரம் மண்டலத்தில் 30 பேர் சென்ற மாதம் ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு பணிக் கொடை மற்றும் ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்கப்படவில்லை. இதனை கண்டித்து சி.ஐ.டி.யு., அண்ணா தொழிற் சங்கத்தினர் உட்பட அனைத்து தொழிற் சங்கத்தினர் 100க்கும் மேற்பட்டவர்கள் கடலூர் அரசு போக்குவரத்து கழக பணி மனை முன் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம்: 

               இதேப் போல் சிதம்பரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 200க்கும் மேற் பட்ட தொழிலாளர்கள் தங்களது எதிர்பை பணிமனையை விட்டு வெளியேறினர். இதனால் அங்கு பரபரப்பு காணப்பட்டது. 

இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், 

                     "நிர்வாகத்திறன் இல்லாததால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். கடந்த மாதம் வழங்கிய தொகை கூட இந்த மாதம் வழங்கப்படவில்லை. தற்போது பழுதடைந்த பஸ்சை சரி செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. விதி முறைப்படி வழங்கப்பட்ட ஓய்வூதியப் பலன் களை முறைப்படி வழங்கா விட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்' என தெரிவித்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior