கடலூர் :
செயல்வழிக் கற்றல் மாநில ஒருங்கிணைப் பாளர் கடலூர் மாவட்ட பள்ளிகளில் ஆய்வு செய்தார். அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் செயல் வழிக் கற்றல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்ட செயல்பாடுகள் மற்றும் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து மாநில ஒருங்கிணைப்பாளர் பிச்சையா மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் குமராட்சி ஒன்றியத்தில் நான்கு பள்ளிகளிலும், கீரப்பாளையம் ஒன்றியத்தில் ஒரு பள்ளியையும் ஆய்வு செய்தார். பின்னர் மாலை சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள நகராட்சி துவக்கப் பள்ளியில் இரண்டு ஒன்றியங்களைச் சேர்ந்த ஆரம்ப, நடுநிலை, ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் மாணவர் கள் எளிதில் புரிந்து கொள் ளும் வகையில் செயல் வழிக் கற்றல் முறையை செயல்படுத்துவது குறித்து மாநில ஒருங்கிணைப் பாளர் பிச்சையா ஆலோசனை வழங்கினார். கூட் டத்தில் அனைவருக்கும் கல்வி இயக்க மாவட்ட திட்ட அலுவலர் மணவாள ராமானுஜம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக