உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 01, 2010

விருத்தாசலம் அடுத்த நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மேமாத்தூரில் ஆற்றைக் கடக்க மேம்பாலம் கட்டப்படுமா?

விருத்தாசலம்: 

               விருத்தாசலம் அடுத்த நல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது மேமாத்தூர் ஊராட்சியில் ரயில்வே காலனி, தரிசு, புதிய காலனி ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில் மேமாத்தூர், ரயில்வே காலனி, தரிசு ஆகிய கிராமங்கள் மணிமுக்தாற்றுக்கு வடக்கு பகுதியிலும், தெற்கு பகுதியில் புதிய காலனியும் உள்ளது. மேமாத்தூரையும், புதிய காலனியையும் இணைக்க ஆற்றில் மேம்பாலமோ, தரைபாலமோ இல்லை. விருத்தாசலத்தில் இருந்து மேமாத்தூர் கிராமத்திற்கு அரசு பஸ் செல்கிறது. ஆனால் அந்த பஸ் ஆற்றின் தெற்கு பகுதியில் உள்ள புதிய காலனி அணைக்கட்டு வரைதான் செல்லும். அங்கிருந்து இறங்கி ஆற்றை கடந்துதான் மேமாத்தூர், தரிசு, ரயில்வே காலனி மக்கள் செல்ல வேண்டும். அதுபோல் அந்த கிராமத்தினர் ஆற்றைக் கடந்து புதிய காலனிக்கு வந்துதான் பஸ் பிடித்துச் செல்ல வேண்டும். மழைக் காலங்களில் ஆற்றில் தண்ணீர் ஓடினால் ஆற் றின் வடக்கு பகுதி மக்கள் ஆற்றைக் கடக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் இவர்கள் எந்த வெளியூர்களுக்கும் செல்ல முடியாது. அப்படி தவிர்க்க முடியாமல் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டால் மேமாத்தூரில் இருந்து புதூர் வரை நடந்து சென்று அங்கிருந்து பட்டி, எறுமனூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக பல கி.மீ., தூரம் சுற்றிக் கொண்டு விருத்தாசலம் வர வேண்டும். மேமாத்தூர் கிராமத்திற்கு அருகில் உள்ள நல்லூருக்கு மழைக்காலங்களில் விருத்தாசலம் வழியாக சுற்றுப் பாதையில் சிரமத்துடன் செல்லும் நிலை உள்ளது.


இதுகுறித்து மேமாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசாமி கூறுகையில்: 

                எங்கள் ஊருக்கென வரும் பஸ் ஆற்றுக்கு தென்புறம் உள்ள புதிய காலனியிலேயே நின்று விடும். நாங்கள் அனை வரும் ஆற்றைக் கடந்து புதிய காலனிக்குச் சென்று அங்கிருந்து தான் பஸ் பிடித்துச் செல்லவேண்டும். மழைக் காலங்களில் ஆற்றில் தண்ணீர் ஓடினால் எங்கள் பாடு திண்டாட்டம்தான். அப்போது நாங்கள் புதூர் கிராமம் வரை நடந்தே சென்று அங்கிருந்து பஸ் பிடித்து செல்லும் நிலை உள்ளது. குறிப்பாக ஐந்தாம் வகுப்பிற்கு மேல் மாணவர்கள் நல்லூரில் தான் படிக்கிறார்கள். ஆற்றில் தண்ணீர் ஓடும் காலங்களில் அவர்கள் ஆற்றைக் கடந்து செல்ல முடியாததால் அவர்கள் படிப்பு பாதிக்கப்படுகிறது. புதூர் வரை வரும் பஸ்சை எங்கள் ஊர் வரை வந்து செல்ல அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் நடவடிக்கையும் இல்லை. அவசர சிகிச்சைக்கு கூட உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல முடியாது. அரசு எங்களின் நிலையை உணர்ந்து ஆற்றில் மேம்பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior