உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 01, 2010

நெல்லிக்குப்பம் போலீஸ் ஸ்டேஷன் திறப்பு விழா காண்பது எப்போது?

நெல்லிக்குப்பம் : 

                நெல்லிக்குப்பத்தில் கட்டி முடிக்கப்பட்ட போலீஸ் நிலையம் திறக்கப்படாததால் மக்கள் சிரமப்படுகின்றனர். நெல்லிக்குப்பத்தில் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழமையான ஓட்டு கட்டடத்தில் போலீஸ் ஸ்டேஷன் இயங்கி வந்தது. மழைக் காலங்களில் உள்ளே தண்ணீர் தேங்கி நிற்கும். வழக்கு கோப்புகள் பாழாகும் நிலை இருந்தது. தமிழக அரசு புதிய கட்டடம் கட்ட 28 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி ஒரு வருடத்துக்கு முன் பணி துவங்கியது.

                        இன்ஸ்பெக்டர் அலுவலகம் மட்டும் பழைய இடத்தில் பின்புறமுள்ள கட்டடத்தில் இயங்கி வருகிறது. போலீஸ் நிலையம் தற்காலிகமாக காவலர் குடியிருப்பில் சப் இன்ஸ்பெக்டருக்காக ஒதுக்கப்பட்ட வீட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு போதுமான இடவசதி இல்லாததால் போலீசார் மிகவும் சிரமப் படுகின்றனர். புகார் கொடுக்க வரும் பொது மக்களும் இன்ஸ்பெக்டர் அலுவலகம் போலீஸ் ஸ்டேஷன் என இரண்டு இடத்துக்கும் அலைகின்றனர். புதிய கட்டட பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் இதுவரை திறக்கப்படவில்லை. கட்டடத்தை திறக்க எந்த அமைச்சரின் வருகைக்காக காத்திருக்கின்றனர் என தெரியவில்லை. பொதுமக்கள் மற்றும் போலீசார் நலன் கருதி பணிகள் முடிந்த புதிய போலீசில் ஸ்டேஷன் கட்டடத்தை திறக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior