கடலூர் :
கோவில் திருவிழாவின் போது நடந்த பாட்டுக் கச்சேரியில் நடனம் ஆடியதால் ஏற்பட்ட தகராறில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். கடலூர் அடுத்த குடிகாடு முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி கடந்த 25ம் தேதி இரவு பாட்டுக்கச்சேரி நடந்தது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் உறவினர் ஒருவர் எழுந்து நடனம் ஆடினார். அதனை அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் மற்றும் ஊர் மக்கள் தட்டிக்கேட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள் நின்றிருந்தபோது அவ்வழியாக வந்த பிரதீப்பிடம் உன்னால் தான் திருவிழா சரியாக நடக்கவில்லை என கூறி அவரை திட்டினர். அதனை தட்டிக் கேட்ட பிரதீப்பின் சகோதரி புனிதாவை பாலகிருஷ்ணன் தரப்பினர் கல்லால் தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து தெய்வசிகாமணி (38)யை கைது செய்தனர். மேலும் பாலகிருஷ்ணன், தெய்வசிகாமணி, மகாலிங்கம், பிரபாகரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக