உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூலை 01, 2010

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் நடவடிக்கை: என்.எல்.சி., நிர்வாகத்துறை இயக்குனர் எச்சரிக்கை

குறிஞ்சிப்பாடி: 

             "நாட்டில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளை விட என்.எல்.சி., அதிகமாக வழங்க முன்வந்துள்ளது. வேலை நிறுத்தம் சட்ட விரோதமானது. வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால்    நடவடிக்கை எடுக்கப்படும்' என, என்.எல்.சி., நிர்வாகத்துறை இயக்குனர் பாபுராவ் தெரிவித்தார்.

என்.எல்.சி., நிர்வாகத்துறை இயக்குனர் பாபுராவ் நேற்று கூறியதாவது: 

                 என்.எல்.சி.,யில் புதிய ஊதிய உயர்வு குறித்த அங்கீரிக்கப்பட்ட தொழிற் சங்கங்களான தொ.மு.ச., - பா.தொ.ச., ஆகியவை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தின. இந்த பேச்சுவார்த்தை 65 அமர்வு மூலம் நடந்ததில் நிர்வாகம் சார்பில் அதிக கோரிக்கைகள் ஒப்புக் கொள்ளப்பட்டன. என்.எல்.சி., நிறுவனம் தொழிலாளர்களுக்கு 25 சதவீதம் பிட்மென்ட் பெனிபிட், 3 சதவீதம் கூடுதல் இன்கிரிமென்ட் வழங்க முன்வந்துள்ளது. இதைத் தவிர 3 சதவீதம் சர்வீஸ் வெயிட்டேஜ்  வழங்குகிறது. மற்ற பொதுத்துறை நிறுவனங்களான சால் 21 சதவீதம் பிட்மென்ட் பெனிபிட் 1.5 சதவீதம் இன்கிரிமென்ட் மட்டுமே வழங்குகிறது.

                  தற்போது ஊதிய மாற்று ஒப்பந்தத்தில் கூடுதல் இன்கிரிமென்ட், சர்வீஸ் வெயிட்டேஜ் போன்றவை 2009 செப்., 1லிருந்தும், அலவன்ஸ்கள் 2010 ஜனவரி 1 முதலும் வழங்க நிர்வாகம் முன்வந்துள்ளது. இதனால், தொழிலாளர்கள் முறையே ஒன்பது மற்றும் ஐந்து மாத நிலுவைத் தொகை பெற முடியும். இதுபோன்று எந்த பொதுத்துறை நிறுவனமும் வழங்கவில்லை. இதனால் ஆண்டுக்கு என்.எல்.சி.,க்கு 271 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். என்.எல்.சி., உற்பத்தித்திறன் மிகவும் மெதுவாகவே அதிகரித்து வருகிறது. புதிய திட்டங்கள் சமீப காலத்தில் தான் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, என்.எல்.சி.,க்கு வருமானம் போதுமான அளவிற்கு உயரும் என்று எதிர்பார்க்க இயலாது.

                 இருப்பினும் உற்பத்தியை பாதிக்கும்படியான போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும் பட்சத்தில், நிர்வாகம் அளிக்க முன்வந்த ஒப்பந்த சலுகைகளை மறுபரிசீலனை செய்யும். வேலை நிறுத்தம் தொடர்ந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். வேலை நிறுத்தத்தால் தமிழகத்தில் மின்வெட்டு அதிகரித்து விவசாயம், மாணவர்களின் படிப்பு, தொழில் துறையில் வளர்ச்சி குறையும். இவ்வாறு நிர்வாகத்துறை இயக்குனர் பாபுராவ் கூறினார். பேட்டியின் போது நிதித்துறை இயக்குனர் சேகர், செயல் இயக்குனர் சந்திரமோகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior