சிதம்பரம்:
தி.மு.க., கூட்டணி கட்சி களும், மா.கம்யூ.,வும் போட்டி போட்டு போஸ்டர் ஒட்டும் நிலையில் மா.கம்யூ., கவுன்சிலர் தி.மு.க., விற்கு தாவியது சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கடந்த 30ம் தேதி நடந்த நகராட்சி கூட்டத்தில், குடிநீர் பிரச்னை தொடர்பாக நடந்த விவாதத்தின் போது பிரச்னை ஏற்பட்டு தி.மு.க., - காங்., உள்ளிட்ட கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் நாற்காலியை தூக்கி வீசியும், மைக் மற்றும் டியூப் லைட்டை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டனர்.
இச்சம்பவத்தைக் கண் டித்து மா.கம்யூ., கடலூர் மாவட்ட குழு சார்பில் கண்டன போஸ்டர் ஒட் டப்பட்டது.இதனைத் தொடர்ந்து தி.மு.க., - காங்., உள் ளிட்ட கூட்டணி கட்சியினர், மா.கம்யூ., போஸ்டருக்கு பதிலடிக்கு கொடுக் கும் வகையில் அவர்கள் ஒட்டிய போஸ்டருக்கு அருகிலேயே "தலை விரித் தாடும் குடிநீர் பிரச்னை, அடிப்படை வசதி கேட்டு நகர் மன்றத்தில் குரல் கொடுத்து போராடினால் அதற்குப் பெயர் ஜனநாயக படுகொலையா, கொலைவெறி தாக்குதலா, வன்முறையா' என கேள்வி கேட்டு போட்டியாக போஸ்டர் ஒட்டினர். சிதம்பரத்தில் தி.மு.க.,- மா.கம்யூ., கட்சிகள் பதிலுக்கு பதில் போஸ்டர் ஒட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சிதம்பரம் நகர மன்றத்தில் இருந்த ஒரே மா.கம்யூ., கவுன்சிலர் சந்திரசேகர் (17வது வார்டு) நேற்று காலை சிதம்பரம் வந்த சுகாதாரத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் முன்னிலையில் தி.மு.க.,விற்கு தாவினார். தி.மு.க.,- மா.கம்யூ., இடையே போஸ்டர் யுத்தம் நடந்துவரும் நிலையில் கவுன்சிலரின் கட்சி தாவல் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க.,வில் ஐக்கியம்:
தி.மு.க.,வில் ஐக்கியம்:
சிதம்பரம் நகராட்சியில் 4, 5, 17 ஆகிய மூன்று வார்டுகளை மா.கம்யூ., கைப்பற்றியது. இதில் 5வது வார்டில் வெற்றி பெற்ற பவுஜியா பேகம் நகர மன்ற தலைவரானார். கடந்த சில மாதங்களுக்கு முன் 4வது கவுன்சிலர் ராஜலட்சுமி டி.பி.ஐ.,யில் இணைந்தார். இருந்த ஒரே ஒரு கவுன்சிலர் சந்திரசேகர் (17வது வார்டு). அவரும் நேற்று தி.மு.க.,வில் ஐக்கியமாகி விட்டதால் சிதம்பரம் நகர மன்றத்தில் மா.கம்யூ., கவுன்சிலர் இல்லாமல் போக, தலைவர் மட்டுமே தன்னந்தனியாக தவிக்க வேண்டிய நிலை ஏற் பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக