உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 18, 2009

15 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது வெளியேற முடியாமல் மக்கள் தவிப்பு


காட்டுமன்னார்கோவில் :

                    கடலூர், பெரம்பலூர் மாவட் டங்களில் பெய்த கன மழையால் சிதம்பரம் அருகே 15 க்கும் மேற் பட்ட கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
        
                             வார்டு புயல் காரணமாக சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற் றும் பெரம்பலூர் மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்துள்ளது. இதனால் வீராணம் ஏரிக்கு செங் கால்ஓடை, கருவாட்டு ஓடை, பாளையங்கோட்டை ஓடை வழியாக 5,300 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. வீராணம் ஏரி 47.5 அடி உயரத்தில் தற்போது 46.7 அடி உயரம் தண்ணீர் நிரம்பியுள் ளது. ஏரியின் பாதுகாப்பு கருதி வெள்ளியங்கால் ஓடையில் 14 ஷட் டர்களில் 10 ஷட்டர்கள் திறக்கப் பட்டு 2,700 கன அடி தண்ணீரும், வெள்ளாற்றில் 2,410 கன அடியும், சென்னைக்கு 77 கன அடியும் மொத் தம் 5,187 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காட்டுமன்னார்கோவில் அடுத்த ஷண்டன், தொரப்பு, ஈச்சம்பூண்டி, பால்வாய்கண்டன், ரெட்டியூர், ஆயங்குடி, முட்டம், குஞ்சமேடு, கருப்பேரி, எடையார், மேலராதாம் பூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட மழை நீர் ஆகியவை சேர்ந்து மன வாய்க்காலில் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் செல்கிறது. இந்த மன வாய்க்கால் குமராட்சி அடுத்த வீரநத்தம் கிராமம் அருகே வெள்ளியங்கால் ஓடையில் வந்து சேர்கிறது.

                              இதனால் வெள்ளியங்கால் ஓடையில் வீராணம் தண்ணீர் 2,700 கன அடியும், மன வாய்க்கால் தண்ணீர் 10 ஆயிரம் கன அடியும் மொத்தம் 12 ஆயிரத்து 700 கன அடி தண்ணீர் சென்று பழைய கொள்ளிடத்தில் கலக்கிறது. ஒரே நேரத்தில் செல் லும் அதிக அளவு தண்ணீரை பழைய கொள்ளிடம் உள் வாங்காததால், திருநாரையூர், வீரநத்தம், நடுத் திட்டு, செங்கேனி பள்ளம், எடையார், சிறகிழந்தநல்லூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் தண்ணீர் சூழ்ந்தது. பொதுமக்கள் ஊரை விட்டு வெளியேற முடியாமல் தவிக்கின்றனர்.


குறிப்பாக பழைய கொள்ளிடக்கரை ஓரத்தில் உள்ள நந்திமங்கலம் கிராமம் முற்றிலும் தண்ணீரில் மூழ்கியது. இப்பகுதியில் பாதிக் கப்பட்ட பொதுமக்கள் பாதுகாப் பான பகுதியில் வெளியேறியுள்ளனர். ஒரு சில இடங்களில் படகு மூலமும் ஊருக்குள் மக்கள் சென்று வருகின்றனர். டி.ஆர்.ஓ., நடராஜன் வெள்ளம் சூழ்ந்த பகுதியை பார் வையிட்டார். மேலும் காட்டுமன் னார்கோவில் வேளாண்மை அதிகாரிகள் பயிர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கணக்கெடுத்து வருகின்றனர்.

                                கடலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி பரங்கிப் பேட்டையில் அதிகபட்சமாக 87 மி. மீட்டர் மழை பெய்தது. தொழுதூரில் 68 மி.மீ., வேப்பூரில் 54, கொத்தவாச்சேரியில் 48, காட்டுமயிலூரில் 47, மே.மாத்தூர் 45, புவனகிரி 40, கடலூர் 39.30, சிதம்பரம் 39, லால் பேட்டை 38, சேத்தியாதோப்பு 35, ஸ்ரீமுஷ்ணம் 35, லக்கூர் 33, பெலாந் துறை 32,கீழச்செறுவாய் 30, வானமாதேவி 23.40, விருத்தாசலம் 23.10, அண்ணாமலை நகர் 23, குப்பநத்தம் 22.20 பண்ருட்டி 20, காட்டுமன்னார் கோவில் 10 மி.மீட்டர் மழை பெய் துள்ளது.கடலூர் திருப்பாதிரிபுலியூர் நவநீதம் நகரில் சுவர் இடிந்து விழுந்ததில் ஜெயபால்(30), அவரது மனைவி ஜெயலட்சுமி(25), மகன் ஜெயகுமார்(9) காயமடைந்தனர். அனைவரும் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராமாபுரம் பகுதியில் 2 வீடுகள் இடிந்து விழுந் துள்ளன.

                      ரோஜா செடிகள் பாதிப்பு:கடலூரை சுற்றியுள்ள தாழ்வான நகர் பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட வீடுகளை மழை நீர் சூழ்ந்துள்ளது. கடலூர் அடுத்த ராமாபுரம், சாத்தங் குப்பம், எஸ்.புதூர், வழிசோதனைபாளையம், வெள்ளக்கரை பகுதிகளில் வேர்கடலை மற்றும் ரோஜா, காக் கட்டன் உள்ளிட்ட பயிர்கள் பாதிப்படைந்துள்ளன

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior