உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, டிசம்பர் 18, 2009

ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும் திட்டக்குடியில் இணை ஆணையர் திருமகள் பேட்டி

திட்டக்குடி :

                         திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் திருக்குளத்தை போலீஸ் பாதுகாப்புடன் சுத்தம் செய்ய அறிவுறுத்தப் பட்டுள்ளதாக இணை ஆணையர் திருமகள் கூறினார்.கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம் கோவில்களை இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை இணை ஆணையர் திருமகள் நேற்று ஆய்வு மேற் கொண்டார். திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி கோவில் கும்பாபிஷேக திருப்பணி, திருக்குளம் ஆக்கிரமிப்பு உட்பட கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை பார்வையிட்டு,

பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:

                      திட்டக்குடி வைத்தியநாத சுவாமி கோவில் திருக்குளத்தை சுத்தம் செய்யும் பணியின் போது, மோதல் ஏற்படுவதை போலீசார் தவிர்த்துள்ளனர். திருக் குளத்தை சுத்தம் செய்தது தவறில்லை. உரிய போலீஸ் பாதுகாப்புடன் சுத்தம் செய்ய கோவில் செயல் அலுவலரிடம் கூறியுள்ளேன். திருக்குளம் சம்பந்தமான வழக்குகள் கோர்ட்டில் நடந்து வருவதால் ஆக்கிரமிப்புகளை பொதுமக்களாக அகற்ற நினைப்பது தவறு. திட்டக்குடி நானூற்றொருவர் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் முறையாக கணக்கெடுக்க செயல் அலுவலருக்கு பரிந் துரை செய்துள்ளேன்.

                      வழக்குகள் நிலுவையிலுள்ள பகுதி, கோவிலுக்கு சொந்தமான இடத்திலுள்ள ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்படும் என கூறினார். தொடர்ந்து திருவட்டத்துறை திரிபுரசுந்தரி உடனுறை தீர்த்தபுரீஸ்வரர் கோவிலில் 10 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் தளம் அமைத்தல், சுற்றுச்சுவர் பணிகளை பார்வையிட்டார். மேலும் இறையூர் அன்னபூரணி உடனுறை தாகம்தீர்த்தபுரீஸ்வரர், பெண்ணாடம் அழகியகாதலி அம்மன் உடனுறை பிரளயகாலேஸ்வரர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது உதவி ஆணையர் ஜெகநாதன், விருத்தாசலம் ஆய்வாளர் தேவராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior